Site icon Vivasayam | விவசாயம்

கீரைகளைப் பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டியவை

கடைக்குப் போகிறோம், கீரைக்கட்டு வாங்கி வருகிறோம் அல்லது தோட்டத்தில் இருக்கும் கீரையைக் கிள்ளி வருகிறோம் அல்லது மரத்தில் இருந்து ஒடித்துக்கொள்கிறோம். வீட்டுக்குக் கொண்டு வந்த உடனேயே அதை அப்படியே சமைத்துச் சாப்பிட்டு விட முடியாது.

கீரை என்பது மிகவும் எளிமையான உணவுதான் என்றாலும், அதைச் சமைத்துச் சாப்பிடுவதற்கு முன் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

கீரைக்கட்டு என்றால், அதில் கீரை மட்டும் இருக்காது. அதோடு புல், பூண்டு என்று தேவையற்ற செடி, கொடிகளும் இருக்கும். முதலில் இவற்றை அப்புறப்படுத்த வேண்டும். கீரையில் பழுத்த, காய்ந்த இலைகளை நீக்க வேண்டும். சிறு சிறு ஓட்டைகள் இருக்கும் இலைகளையும் நீக்க வேண்டும்.

இப்படி ஆய்ந்து எடுத்த கீரையை, முழுதாகவோ அல்லது சிறிது சிறிதாக நறுக்கிய பிறகோ, தண்ணீரில் நன்றாக அலச வேண்டும். குறைந்தது மூன்று முறையாவது தண்ணீரை மாற்றி அலச வேண்டும். இதனால், கீரையில் உள்ள அழுக்கு, மண் மற்றும் நுண்கிருமிகள் விலக்கப்பட்டுவிடும்.

கீரையை சமைக்கும் போது

கீரைகளைச் சமைக்கும்போது, அதன் பச்சை நிறம் மாறாமல் ஒருமுறைகூட சமைக்க முடியவில்லையே என்று ஏங்குபவர்களுக்கு ஒரு எளிய யோசனை. கீரைகளை எந்த வகையிலாவது சமைக்கும் போது உடன் அரை ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக்கொள்ளுங்கள். பிறகு பாருங்கள், கீரையின் பச்சை நிறம் அப்படியே இருக்கும். கீரையின் முழுப் பலனும் வீணாகாமல் அப்படியே கிடைக்கும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version