Site icon Vivasayam | விவசாயம்

புல்வெளிப் பகுதிகளில் அதிக மண் புழு!

தென் அமெரிக்காவில் உள்ள Los Llanos வெப்பமண்டல புல்வெளி பகுதியில் காணப்படும் மண் மிகப் பெரிய மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால் அப்பகுதியில் உள்ள மண்ணில் அதிகம் மண் புழுக்கள் காணப்படுகிறது என்பதாகும். தானகவே அப்பகுதியில் மண் புழு சாணம் உருவாகியுள்ளது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அப்பகுதியில் 3 அடி ஆழத்திலேயே மண் புழுக்கள் மிக அதிகமாக உருவாகியுள்ளது. இதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து பார்த்ததில் புல்வெளி அதிகம் இருப்பதாலேயே மண் புழுக்கள் உருவாகியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

பெரும்பாலும் அடர்ந்த மண் குவியல்கள் உள்ள பகுதியில் மண்புழு சாணம் உருவாகுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மழையினால் ஏற்படும் கரிமபொருளினால் புழுக்கள் உருவாகிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதிகமாக மண் புழுக்கள் பருவ மழை பெய்யும்போது ஏற்படும் வெள்ளப் பெருக்கில் உள்ள கரிம பொருளினால் உருவாகிறது. மேலும் அவர்களுடைய ஆய்வின்படி சமவெளி பகுதிகளில் மண் புழுக்களுக்கு தேவையான உணவு கிடைப்பதாலேயே புழுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.

பெரும்பாலும் புழுக்கள் சேற்று பகுதிகளில்தான் உருவாகிறது. வெள்ளத்தால் ஏற்படும் Surales சதுப்பு சாக்கடைகளாக உருவாகி  தாவரங்கள் மற்றும் புற்களின் அடியில் சேர்ந்து விடுகிறது. இந்த சதுப்பு சாக்கடைதான் மண் புழு உருவாக பெரிதும் துணைப்புரிகிறது. Andiorrhinus என்ற மண்  புழு கிட்டதட்ட 93% சதுப்பு நிலப் பகுதிகளில் உருவாகிறது.

http://www.livescience.com/54715-mysterious-mounds-made-of-worm-poop.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

 

 

 

 

Exit mobile version