Site icon Vivasayam | விவசாயம்

ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும்!

”ஓங்கோல் மாடுகள் எங்கு கிடைக்கும். இந்த இன மாடுகள் தினமும் 40 லிட்டர் பால் கறக்கும்” என்கிறார்கள், இது உண்மையா? இதனை பற்றி கூறுகிறார் மோகன் ராவ்.

ஆந்திரா மாநிலம், ஓங்கோல் மாவட்டத்தில் கால்நடை மற்றும் விவசாய வளர்ச்சிக்காக செயல்பட்டு வரும் ’எபெர்ட்’ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மோகன் ராவ் பதில் சொல்கிறார்.

“ஆந்திரா மாநிலத்தின் சொத்து” என்று கூட ஓங்கோல் மாடுகளைச் சொல்லலாம். ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்டங்களில் ‘ஓங்கோல்’ மாடுகள் அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. சென்னையைச் சுற்றியுள்ள திவள்ளூர், திருத்தணி, ஆரம்பாக்கம்.. போன்ற சில பகுதிகளிலும் இந்த வகை மாடுகள் உள்ளன. இவை பாலுக்காக இல்லாமல், பெரும்பாலும் விவசாய வேலைகளுக்ககாத்தான் வளர்க்கப்படுகின்றன. ஆனாலும் ஒரு மாட்டிலிருந்து ஒரு நாளைக்கு எட்டு லிட்டர் அளவுக்குப் பால் கிடைக்கும்.

பாலில் கொழுப்பின் அளவும் அதிகமாக இருக்கும். இவை அதிக நோய் எதிர்ப்புத்திறன் கொண்டவை., அதோடு கடுமையான வெப்பத்தையும் தாங்கும் தன்மை கொண்டவை. ஓங்கோல் காளைகளை டென்மார்க் உள்பட பல நாடுகள் இன்றளவும் இறக்குமதி செய்து வருகின்றன. இந்தக் காளைகளுடன் அவர்களது நாட்டுப் பசுவை இணைத்து பல புதிய இனங்களை உருவாக்கி வருகிறார்கள். இப்படி உருவாகும் மாடுகள்தான் அதிக பால் உற்பத்தியைக் கொடுக்கின்றன.

நம் நாட்டில் உள்ள ஓங்கோல் மாடுகள் 40 லிட்டர் அளவுக்கு பால் கொடுக்கும் திறன் கொண்ட மாடுகள், 30 ஆயிரம் ரூபாய் முதல், மாட்டின் கன்று ஈனும் திறனைப் பொருத்து விற்பனை செய்யப்படுகின்றன. ஓங்கோல் மற்றும் நெல்லூர் மாவட்ட கிராமங்களில் இந்த இன மாடுகள் கிடைக்கும்.

தொடர்புக்கு,

சுனில் கிருஷ்ணா,

செல்போன்: 99599-59977

நன்றி!

பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version