Site icon Vivasayam | விவசாயம்

விவசாய பழமொழிகள்

இடிக்கின்ற வானம் பெய்யாது, குலைக்கின்ற நாய் கடிக்காது.

ஆனி அடைச்சாரல், ஆவணி முச்சாரல்

ஆடி அமாவசையில் மழை பெய்தால் அடுத்த அமாவசை வரை மழை இல்லை.

ஆவணி தலை வெள்ளமும், ஐப்பசி கடைவெள்ளமும் கெடுதி.

புரட்டாசி பெய்து பிறக்க வேண்டும், ஐப்பசி காய்ந்து பிறக்க வேண்டும்.

ஐப்பசி அடைமழை, கார்த்திகை கனமழை.v

கார்த்திகைக்குப்பின் மழையுமில்லை, கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை.

மார்கழி பிறந்தால் மழையும் இல்லை. பாரதம் முடிந்தால் படையும் இல்லை.

தைப் பிறந்தால் தலைக் கொடை.

மாசி மின்னல் மரம் தழைக்கும்.

மாசிப் பனி பச்சையும் துளைக்கும்.

பனி பெய்தால் மழை இல்லை. பழம் இருந்தால் பூ இல்லை.

நன்றி: கலைக்கதிர் ஆக. 2007 இதழ்

 

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

Exit mobile version