Site icon Vivasayam | விவசாயம்

Billbugs பயிர்களை அழிக்கும் அந்து பூச்சிகள்

புதிய வகை அந்து பூச்சி வகையினைச் சார்ந்த Billbugs வண்டு இனத்தினை தெற்கு கனடா மற்றும் மெக்ஸிக்கோ, கரிபீயன் பகுதிகளில் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த வண்டு பயிர்களை மிக விரைவாக அழித்துவிடும் ஆற்றல் பெற்றதாக உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதேப் போல அமெரிக்காவிலும் இந்த Billbugs வண்டு தாக்குதலினால் turfgrass அதிக அளவு பாதிக்கப்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அப்பகுதியில் இது மட்டுமல்லாது மேலும் 10 புதிய வண்டு இனங்களும் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வண்டு பயிர்களின் வேர் தொகுதிகளை உணவாக எடுத்துக்கொள்கிறது. குறிப்பாக பழுப்பு புல் வகைகளுக்கு இது அதிக அளவு பாதிப்பை உருவாக்குகிறது. இந்த வண்டு இனம் பயிர்களின் வேர் தொகுதிகளில் இரண்டு அல்லது மூன்று முட்டைகளை இட்டு மேலும் அதன் இனம் அதிகப்படுத்தும் பணியினை செய்து விடுகிறது.

இதனை ஒழிக்க பூச்சிக்கொல்லி மருந்தினை பயன்படுத்துவது மட்டும் தீர்வு கிடையாது. இதனை நிவர்த்தி செய்ய வண்டு எதிர்ப்பு கென்டக்கி ப்ளூகிராஸ் பயிர்வகையினை நிலத்தில் பயிரிட்டால் billbugs வண்டு பாதிப்பு குறையும். மேலும் சில வகை சிலந்திகள் இந்த வண்டு இனத்தினை உணவாக எடுத்துக் கொள்கிறது.

https://www.sciencedaily.com/releases/2016/05/160502093654.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.Thiral

 

 

 

 

 

 

 

Exit mobile version