Site icon Vivasayam | விவசாயம்

புதிய கிசான் ஸ்வேதா திட்டம்!

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி வானிலை, சந்தை நிலை, பயிர் பாதுகாப்பு, நிபுணர் ஆலோசனை, கிராம வியாபாரிகள் ஆகிய ஐந்து கூறுகளை கொண்ட விவசாய தகவல் வழங்கும் புதிய மொபைல் ஆன்டிராய்டு போனை அறிமுகப்படுத்தினார். இந்தியாவில் இது வரையில் 87 மில்லியன் கிராமப்புற மக்கள் ஸ்மார்ட்போனை பயன்படுத்தி வருகின்றனர். உலகின் இரண்டாவது ஸ்மார்ட்போன் சந்தையாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் உள்ள மக்களில் 60% மக்கள் விவசாயத் தொழிலையே செய்து வருகின்றனர். ஆதலால் இது இந்திய பொருளாதாரத்தின் முதுகெழும்பாகவே இருந்து வருகிறது. தற்போது பிரதமர் அறிமுகப்படுத்திய இத்திட்டம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக  இருக்கும்.

தற்போது விவசாயம் சார்ந்த செய்திகள் அனைத்தும் ஸ்மார்ட்போனில் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கிடைக்கிறது. Ekgaon டெக்னாலஜிஸ் நிறுவனர் விஜய் பிரதாப் சிங் ஆதித்யா ஆலோசனைப்படி இச்சேவை மொபைல் அடிப்படையில் இருப்பதால் பயனுள்ளதாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இது பண்ணை ஆலோசனைகளையும் உடனுக்குடன்  அளிக்கிறது. Ekgaon டெக்னாலஜிஸ் இரண்டு மட்டங்களில் விவசாயத்தின் பிரச்சினை சமாளிக்கும். மகசூல் அதிகரிக்க Ekgaon ஒன் கிராமம் மூலம் உலக நெட்வொர்க் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ekgaon.com ஆரோக்கியமான இயற்கை மற்றும் கரிம உணவினை உற்பத்தி செய்யவும் உதவியாக உள்ளது. அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர்களையும் விவசாயிகளையும் நேரடியாக இணைக்கும் வகையில் நேரடி பண்ணை அமைப்பினை உருவாக்கியுள்ளனர். இச்சேவைக்கு விவசாயி, பருவம் ஒன்றுக்கு ரூ. 150 செலுத்தினால் போதும். அனைத்து விவசாய தகவலும் உடனுக்குடன் கிடைக்கும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் விவசாய உற்பத்தியினை அதிகரித்து சாகுபடி செலவுகளை குறைக்க வேண்டும் என்பதாகும்.

குறு விவசாயிகள்  Ekgaon சேவையை ‘OneFarm’ மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதன் மூலம் அவர்களுடைய நிலத்திற்கு ஏற்றவாறும் பயிருக்கு ஏற்ற வாரும் ஊட்டச்சத்து மேலாண்மை மற்றும் வானிலை, நோய் எச்சரிக்கைகள் மற்றும் சந்தை விலைகள், அத்துடன் முக்கியமான தகவல்களை வழங்குகிறது. மேலும் உள்ளூர் விவசாய அதிகாரிகள் பற்றியும் கூறுகிறது. Ekgaon ஒவ்வொரு பயிர்/விவசாய திட்டமிடல் ஆகியவற்றை உள்ளூர் மொழி மூலம் தொலைபேசியில் அறிந்துகொள்ளும் வசதி மற்றும் எஸ்.எம்.எஸ் வசதிகளும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. ஒரு விவசாயி எஸ்.எம்.எஸ் அல்லது Ekgaon எண் அழைப்பு மூலம் பொத்தான்களை அழுத்தினால் ஆலோசனை வழங்கும் விதத்தில் ஸ்மார்ட்போன் தயாரிக்கப்பட்டுள்ளது. தற்போது இதற்கென்று தமிழ்நாடு, மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் உள்ள 465 கிராமங்களில் சுமார் 20,000 விவசாயிகள் வேலை செய்து வருகின்றனர்.

இத்திட்டத்தின் மூலம் 10000 விவசாயிகள் விவசாயம்  மேற்கொண்டதில் ஏக்கருக்கு சரசாரி உற்பத்தி அளவான 12.05 குவிண்டாலை தாண்டி 24.91 குவிண்டால் மகசூல் கிடைத்தது. இத்திட்டத்தின் மூலம் ஒரு வருடம் முன்பு ஒரு கிலோ உளுத்தம் பருப்பு 65-க்கு விற்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் ரூ.80-ற்கு விற்கப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளில் இத்திட்டத்தின் மூலம் அதிக லாபத்தை விவசாயிகள் பெற்றுள்ளது ஆய்வுப்படி தெரியவந்துள்ளது. தற்போது மேற்கொள்ளப்பட்ட திட்டத்தின் மூலம் விவசாயிகள் நான்கு மடங்கு இலாபத்தை சம்பாதிக்கிறார்கள். மேலும் விவசாயிகளே நேரடியாக ஆன்லைன் சந்தையில் நுழையவும் இத்திட்டம் வழி வகுக்கிறது. கடந்த ஆண்டு Ekgaon ஆன்லைன் தொடங்கப்பட்டது. தற்போது ஒரே ஆண்டில் 5,000-ற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. மேலும் 50-ற்கும் மேற்பட்ட பொருட்கள் அங்கு விற்கப்படுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 15 மில்லியன் விவசாயிகளை உறுப்பினராக்கி அதன் மூலம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.100 கோடி வருவாயினை பெற்று தருவதே தங்களுடைய லட்சியம் என்று விஜய் பிரதாப் தெரிவித்தார்.

http://social.yourstory.com/2016/04/ekgaon-technologies/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version