Site icon Vivasayam | விவசாயம்

நகரத்தை அழகாக்கும் தோட்டச் செடிகள்

இல்லினாய்ஸ் இயற்கை agroecologist சாரா டெய்லர் லோவல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தற்போது மேற்கொண்ட சுகாதார மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாதனையினை படைத்துள்ளனர். அது என்னவென்றால் தற்போது அமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் பச்சை செடிகளின் அழகு அணி வகுப்பை பார்க்கும்போது முத்துகள் கோர்த்தது போல தோட்ட செடிகள் காணப்படுவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் வீட்டு தோட்டங்களில் காட்டில் உள்ள மூலிகை செடிகளையும் வளர்ப்பதால் மனிதர்களாகிய நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது வீட்டை எப்பொழுதும் சில்லென்று வைத்துக் கொள்ளவும் இது உதவுகிறது. சிகாகோ பகுதியிலும் அழகான வீட்டு தோட்டங்கள் கண்ணை கவரும் விதத்தில் உள்ளது. தற்போது பெரும்பாலும் சீனாவிலும் வீட்டு தோட்டம் பிரபலம் அடைந்து வருகிறது.

சிகாகோவில் கிட்டதட்ட 50 குடும்பங்கள் நாம் உண்ணக்கூடிய பழ வகை தாவரங்கள், மரங்கள், செடிகளை வளர்த்து வருகின்றனர். அழகான புல்வெளிகளையும் வளர்பதால் பறவை இனங்கள் மற்றும் சில நன்மை தரும் பூச்சிகளுக்கு வாழ்விடமாகவும் இது உள்ளது. மேலும் அவர்கள் இயற்கை உரங்களை பயன்படுத்துவதால் அதிக  நன்மைகள் கிடைக்கிறது. இதேப் போல தோட்டச் செடிகளை நம் இந்திய திருநாட்டிலும் வளர்கலாமே!

https://www.sciencedaily.com/releases/2016/04/160405161252.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

.

Exit mobile version