Site icon Vivasayam | விவசாயம்

கீரை பற்றிய ஆய்வு!

UC Davis Seed Biotechnology Center  மற்றும் சீன ஆய்வாளர்கள் கீரை செடிகள் பற்றிய ஆய்வினை மேற்கொண்டனர். அவர்கள் ஆய்வுப்படி மூன்று செயல் முறைகளில், கீரை செடிகளில் பருவத்திற்கு ஏற்ப மாற்றம் அடைகிறது. அதனை ஈடு செய்ய புதிய மரபணு மாற்றங்களை கீரை விதைகளில் பயன்படுத்த உள்ளனர். சுற்றுச்சூழலிற்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் விதைகளை உருவாக்க உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பூக்கும் கீரை விதைகளை பற்றி விரிவான முறையில் ஆய்வு செய்து வருகின்றனர். தற்போதைய இந்த ஆய்வு கீரை விளைச்சலில் புதிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். வாழ்க்கை சுழற்சி மரபணு, குறிப்பிட்ட மைக்ரோ மரபணுவினை உருவாக்குகிறது. DOG1, மரபணு கீரை விதைகள், கீரைகளில் விரைவாக பூக்கள் உருவாகாமல் இருக்க உதவும். இதனால் கீரை வளர்ச்சி அதிகமாகும்.

காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப கீரை விதைகளில் புதிய மரபணுக்களை பயன்படுத்துவதால் அதன் மகசூல் கண்டிப்பாக அதிகரிக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பூக்கும் தாவரங்களுக்கு பொதுவாக சரியான வெப்பநிலை கண்டிப்பாக தேவைப்படும். கீரை வகைகளுக்கு மிதமான வெப்பம் கண்டிப்பாக அவசியம். புதிய DOG1 கீரை மரபணு அதிக வெப்பநிலையிலும் நன்றாக வளரும் ஆற்றல் கொண்டது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160328194709.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version