Site icon Vivasayam | விவசாயம்

காய்கறிகளில் அதிக வைரஸ்

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் காய்கறிகளை பற்றி ஆய்வு செய்ததில் வியக்கத்தக்க தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் நாம் உண்ணும் காய்கறிகளில் அதிக வைரஸ் இருக்கிறது என்பதாகும்.

இதனை சரி செய்ய ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இதனால் விவசாய தொழில் பெருமளவிற்கு பாதிக்கப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்பாதிப்பில் 24 வகையான காய்கறிகள் இடம் பெற்றுள்ளது. இந்த பாதிப்பால் மனிதர்களுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல், வயிற்று வலி மற்றும்  பன்றிக்காய்ச்சல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொதுவாக இந்த பாதிப்பு அசுத்தமான பாசன நீர், மற்றும் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்கள் மூலம் அதிக அளவு பரவுகிறது. அதிகமாக கீரைகள், தக்காளி ஆகியவற்றில் வைரஸ் கிருமிகள் அதிக அளவு இருக்கிறது. இந்த வைரஸ் கிருமிகளை ஓரளவிற்கு தடுக்க வேண்டுமெனில் கீரை மற்றும் காய்கறிகளை உப்பு கரைசல் கொண்டு நன்றாக கழுவ வேண்டும்.

ஏனென்றால் காய்கறிகளின் மேல்தோலில் முப்பரிமாண படிக மெழுகு கட்டமைப்புகள் காணப்படுகிறது. பெரும்பாலும் வைரஸ், இலைகளின் மூலம் அதிக அளவு பரவுகிறது. இந்த வைரஸ்களை பெருமளவு குறைக்க ஒரே வழி இயற்கையான விவசாய முறையினை கண்டிப்பாக கையாள வேண்டும். குறிப்பாக பூச்சிக் கொல்லி மருந்துகள் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160322120502.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version