Site icon Vivasayam | விவசாயம்

கரும்பில் பயோடீசல் தயாரிப்பு

அமெரிக்காவில் ஏற்கனவே சோயா பீன்ஸில் பயோடீசல் உற்பத்தி செய்து வருகின்றனர். ஏனென்றால் சோயா பீன்ஸில் அதிகமான எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் ஒரு பீப்பாய் அளவிற்கு பயோடீசல் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து அமெரிக்காவில் புதுபிக்கத்தக்க பெட்ரோலியம் அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இதனை மேலும் அதிகப்படுத்த எரிசக்தி மேம்பாட்டு ஆராய்ச்சி பணிதிட்ட முகமை தற்போது கரும்பிலிருந்து பயோடீசல் உற்பத்தி செய்துள்ளது.

ஏற்கனவே சோயாவில் அதிக அளவு எண்ணெய்வித்துக்கள் இருப்பதால் அது அமெரிக்க பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது. அதுமட்டுமல்லாது இனிப்பு சோளத்திலும் எண்ணெய் வளம் இருப்பதால் இதிலும் பயோடீசல் தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கரும்பு வளர்சிதை மாற்றங்களை வைத்து, 0.05% எண்ணெய் ஆரம்பக்கட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்டது. ஒரு வருடத்திற்கு பிறகு 20 மடங்கு அதனை அதிகரிக்க முடிந்தது. இதற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது கரும்பில் அதிக அளவு உயிரி உற்பத்தி பொருள் இருந்ததாலே இந்த வளர்ச்சியினை எட்ட முடிந்தது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாது கரும்பு குளிரினை நன்கு தாங்கும் தாவரவகை என்பதால் ஒரு ஏக்கருக்கு சுமார் 17 முதல் 20 பீப்பாய் எண்ணெயினை தயாரிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த எண்ணெய் உற்பத்தியால் பசுமை இல்ல வாயு வெளிப்பாடுகள் அதிக அளவில் பாதிப்படையாது. கரும்பில் அதிக அளவு எத்தனால் காணப்படுகிறது. பெரும்பாலும் தென்கிழக்கு அமெரிக்காவில் கரும்பிலிருந்து பயோடீசல் உற்பத்தி செய்யப்படுவதால் மூன்றில் இரண்டு பங்கு ஜெட்விமானம் இயங்க இது உதவுகிறது. தற்போது வரை சோயாவில் $4.10 மற்றும் கரும்பில் $3.30 எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. எதிர் காலத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் எண்ணையை, அதிக அளவில் பொதுமக்கள் பயன்படுத்த உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160317151305.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version