Site icon Vivasayam | விவசாயம்

cytokinin பாக்டீரியா, தாவரங்களின் நோயினை கட்டுப்படுத்துகிறது

cytokinin பாக்டீரியா, தாவரங்களில் ஏற்படும் தொற்று நோயினை கட்டுப்படுத்துகிறது என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாக்டீரியா தாவர திசுக்களை ஒருங்கிணைத்து அதிக மகசூலினை பெற்றுத்தர வழிவகுக்கிறது என்று கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் தாவர மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் டாக் டாமினிக் Kilian Grosskinsky கூறுகிறார்.

cytokinin பாக்டீரியா தாவரத்திற்கு ஏற்ற ஹார்மோனினை கொடுக்கிறது. அதுமட்டுமல்லாது பயிர்பாதுகாப்பு உத்திகளையும் இது அளிக்கிறது. இந்த ஆய்வு கடந்த 1990-ம் ஆண்டிலிருந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது அறிவியலில் ஒரு திருப்பு முனையாக கருதப்படுகிறது. இந்த ஆய்வின் முக்கிய நோக்கம் நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகளை அழிப்பதேயாகும் என்று பேராசிரியர் தாமஸ் ஜியார்ஜ் Roitsch கூறினார்.

அவரது ஆய்வின் முடிவு கார்போஹைட்ரேட் வளர்சிதைவினை சீரமைக்க மிகவும் உதவியாக இருக்கும். மேலும் கிருமி பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றியும் பல்வேறு நல்ல தகவல்கள் இந்த ஆய்வின் மூலம் கிடைத்துள்ளது.

https://www.sciencedaily.com/releases/2016/03/160317105621.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version