Site icon Vivasayam | விவசாயம்

அல்சைமர் நோயினை குணப்படுத்தும் அவுரி நெல்லி

அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டியின் 251-வது தேசிய அறிவியல் பொருட்காட்சி கூட்டத்தில் புதிய தகவல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அது என்னவென்றால் அவுரி நெல்லிகள் இதய மற்றும் புற்றுநோய்க்கு மிகச்சிறந்த மருந்து பொருளாக செயல்படுகிறது என்பதை கூறியுள்ளது. அதுமட்டுமல்லாது அல்சைமர் நோயிற்கும் மிகச்சிறந்த மருந்தாக இது செயல்படுகிறது.

அதனால் இந்த நெல்லி பழத்திற்கு சூப்பர் பழம் என்று பெயரிட்டுள்ளனர். இந்த பழம் பெரியவர்களுக்கு நினைவாற்றல் மற்றும் புலனுணர்வு செயல்பாட்டை மேம்படுத்த உதவும் என்று ராபர்ட் Krikorian கூறினார். தற்போது உலகளவில் 5.3 மில்லியன் மக்கள் அல்சைமர் நோயினால் பாதிப்படைந்துள்ளனர். இதில் அமெரிக்க மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் 2025-ல் சுமார் 7 மில்லியன் மக்கள் இந்த அல்சைமர் நோயினால் பாதிக்கப்படபோவதாக அறிக்கை கூறுகிறது. இது 2050-ல் மூன்று மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த நோயிலிருந்து விடுபட உலர்ந்த அவுரி நெல்லியின் தூளினை 16 வாரங்கள் எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும் என்று சோதனை செய்து நிரூபித்துள்ளனர். 68 வயதுள்ளவர்களை தினமும் இந்த புளுபெர்ரி தூளினை 16 வாரங்கள் தொடர்ந்து சாப்பிட வைத்ததில் அவர்களுடைய புலன் செயல்திறன் மற்றும் மூளை செயல்பாடு மிக நன்றாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

https://www.sciencedaily.com/releases/2016/03/160314084821.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version