Site icon Vivasayam | விவசாயம்

உணவுப் பிரச்சனைக்குத் தீர்வு

இப்போது நமக்கு இருக்கும் பிரச்சனைகளில் முதன்மையானது, உலக உணவு பாதுகாப்பு பிரச்சனை. எதிர்காலத்தில் உணவில்லாமல் மில்லியன் கணக்கில் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

தற்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த பிரச்சனையினை தீர்ப்பதற்கு மக்களே அவர்களுக்கு தேவையான காய்கறிகளை உற்பத்தி செய்ய பயிற்சி அளிக்க உள்ளதாக கூறினார்கள். இந்த சோதனையினை இங்கிலாந்து ஆய்வாளரான  டாக்டர் ஜூலியட் வைஸ்மான் மேற்கொண்டார். இந்த ஆய்விற்கு மேரி கியூரி திட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.

இதன் மூலம் ஆரோக்கியமான உணவினை மக்களே உற்பத்தி செய்து கொள்ள முடியும். இதனால் காய்கறிகளின் விலையும் அதிகமாகாது. இதனால் உணவு  வினியோக சங்கிலியில் தாக்கம் இருக்காது. மேலும் ஊட்டச்சத்து மிக்க உணவு அனைவருக்கும் கிடைக்கும். அது மட்டுமல்லாது காய்கறிகளை வளர்த்து அதற்கென தனியாக காய்கறி நகரங்களை உருவாக்கலாம். இதனால் காய்கறி தட்டுப்பாடு இருக்கவே இருக்காது. தனியாக காய்கறி நகரங்களை உருவாக்கினால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று டாக்டர் ஜூலியட் வைஸ்மான் கூறினார்.

https://www.sciencedaily.com/releases/2016/03/160310080826.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Exit mobile version