Site icon Vivasayam | விவசாயம்

விலங்குகளின் எரு, மண்ணினை அதிகம் வளமாக்குகிறது

டென்மார்க்கில் உள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் தற்போது மண்ணின் வளத்தினை பற்றி ஆய்வு செய்ததில் விலங்குகளின் எருவில் மிக அதிக எதிர்ப்பு சக்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எருமைகளின் சாணத்தில் அதிக ஆற்றல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக எதிர்ப்பு ஆற்றல் இயற்கையாகவே இடம்பெற்றுள்ளது. இதனை பற்றி அறிந்துகொள்ள ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் Askov சோதனை நிலையத்தில் 122 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதில் 1923-லிருந்து சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை விஞ்ஞானிகள் சோதித்து அறிவியல் இதழில் வெளியிட்டனர். இந்த எரு பாக்டீரியா உருவாக்கும் எதிர்ப்பு மரபணுவினை அழித்துவிடுகிறது. இதனை பற்றி மேலும் தெரிந்துகொள்ள 30,000 டிஎன்ஏ மாதிரிகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டனர். அவர்களுடைய ஆய்வுப் படி குறிப்பிட்ட β-lactam ஆண்டிபயாடிக் தடுப்பு மரபணுக்கள் எருவில் இருப்பது தெரியவந்துள்ளது மற்றும் பூச்சிகளினை அழிப்பதற்கும் எரு சாணம் பயன்படுகிறது என்பதும் தெரியவந்துள்ளது.

உரங்களை பயன்படுத்துவதால் மண்ணில் நோய் எதிர்ப்பு சத்து குறைகிறது எனவே எருமையின் எருவினை அதிக அளவு நிலத்திற்கு பயன்படுத்தினால் மண்ணின் தரம் பல நூற்றாண்டுகளுக்கு அப்படியே இருக்கும் என்பது உண்மை.                       .

https://www.sciencedaily.com/releases/2016/03/160307113729.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version