Site icon Vivasayam | விவசாயம்

நிலத்தடி நீரினை கண்டுபிடிக்க புதிய திறன்பேசி

டச்சு மற்றும் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் நீர்பறவைகள் மற்றும் மீன் இருக்கும் இடத்தினை எளிதாக அறிந்துக்கொள்ள புதிய சென்சார்கள் பொருத்தப்பட்ட திறன்பேசியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த கண்டுபிடிப்பை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ஹட் அறிமுகப்படுத்தினார். இந்த திறன்பேசி நிலத்தடி நீரோடைகளை எளிதாக கண்டுபிடிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமல்லாது வெப்பநிலையினை மிக எளிதாக கண்டுபிடிக்கவும் இது உதவும்.

இந்த போனில் wearer ஜிபிஎஸ் பொருத்தி ப்ளூடூத் மூலம் இந்த வசதியினை எளிதாக பெற முடியும். இந்த போன் மீன் இருக்கும் பகுதிகளை மிக எளிதாக கண்டுபிடித்து விடுகிறது. இந்த கருவி மிக துல்லியமாக வெப்ப நீர் உள்ள பகுதிகளை கண்டுபிடிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் 27 மில்லியன் மீன்பிடி தொழிலாளர்கள் இருக்கின்றனர். இந்த புதிய தொழில்நுட்பம் அவர்களுக்கு மிக உதவியாக இருக்கும். நிலம் மற்றும் மேற்பரப்பு நீர் இடையே உள்ள பரஸ்பர சிக்கலான மற்றும் பல்வேறு நீரோடைகளினை தெளிவாக தெரிந்துகொள்ள இது உதவும்.

மேலும் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் இயற்கை வாழ்விடம் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் ஆகியவற்றையும் தெளிவாக கூறுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஐரோப்பிய புவி ஒன்றியம் பொது சபையில் ஹட் மற்றும் அவரது சகாக்கள் இச்சோதனையினை வெற்றிகரமாக செய்து காட்டினர்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160229111101.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version