Site icon Vivasayam | விவசாயம்

உயிரி உற்பத்தியினை அதிகரிக்க வழிமுறைகள்

ஐக்கிய அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தற்போது அதிக மகசூலினை தரும் பயிரினை கண்டறிந்துள்ளனர். இந்த பயிர் பல கலப்பின பயிர்களில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இது உயிரி சக்தியினை அதிக அளவு கொடுக்கிறது. எனினும் பயிர் விளைச்சல் அதிக அளவு மேம்பாடு அடைய வேண்டுமாயின் நான்கு ஆண்டுகள் ஆகும். இந்த புதிய நுட்பமுறை Miscanthus தாவரத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த முறையினால் உயிரி சக்தியிலிருந்து எத்தனால் உற்பத்தியினை மிக எளிதாக பெற்றுக்கொள்ள முடியும். ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி இந்த ஆய்வு மீண்டும் உருவாகும் பரம்பரை மற்றும் Miscanthus சினென்சிஸ் முக்கிய வேளாண் பண்புகளுக்கு இடையே இணைப்புகளை ஏற்படுத்த தொடங்குகிறது.

ஆராய்ச்சியாளர்கள் Miscanthus சினென்சிஸ் கிரொஸ் ஃபோண்டைனுக்கு இடையே மூன்று முறைகளில் உயிரி பண்புகள் அளவிடப்படுகிறது. பின்னர் தாவரங்களிலிருந்து டி.என்.ஏ எடுக்கப்பட்டு ஒற்றை நியூக்ளியோடைட் பல்லுருத்தோற்றங்கள் அடிப்படையில் ஆய்வு நடத்தி மரபணு வரைப்படத்தினை உருவாக்குகின்றனர். அந்த வரைப்படத்தை அடிப்படையாகக் கொண்டே உயிரி உற்பத்தி தொடர்புடைய மரபணுக்களை Miscanthus ஜினோம்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. இதனைக் கொண்டு தாவரத்தின் உயிரி உற்பத்தியினை தயாரிக்கின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160225105337.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version