Site icon Vivasayam | விவசாயம்

அதிக வளம் கொண்ட ஸ்விட்ச்கிராஸ் பயிர்

மத்திய அமெரிக்க நாடுகளில் தற்போது switchgrass வகை புல் நிலங்களில் அதிக அளவு வளர்ப்பதால் உயிரி எரிபொருள் வளங்கள் அதிக அளவில் கிடைத்து வருகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இது கால்நடைகளுக்கு மிக அதிக அளவு ஆற்றலினை அளிக்கிறது.

மேலும் விஞ்ஞானிகள் மற்ற பயிரினை பற்றி ஆய்வு செய்ததில், நாட்டின் உயிரி எரிபொருள் வளங்களை அதிகப்படுத்த ஒரே வழி சோள பயிரினை அதிக அளவு வளர்க்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். switchgrass  நிலங்களில் உள்ள மண்ணினை அதிகம் வளமாக்குகிறது. தற்போது விஞ்ஞானிகள் switchgrass பயிர்களை பயன்படுத்தி பல்வேறு மரபணுவினை உருவாக்க முயற்சி எடுத்து வருகின்றனர். கடந்த ஏழு ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் உயிரி சக்தி switchgrass தாவரத்தில்தான் அதிகம் உள்ளது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும் அவர்கள் நடத்திய ஆய்வில் சோள பயிர்கள் இயற்கை உரம் தயாரிக்க பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். மேலும் இது மண்ணினை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இந்த பயிருக்கு தண்ணீர் மிக குறைவாக தேவைப்படுகிறது. 2014-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் switchgrass மரபினை உள்ளடக்கிய மூன்று வகைகள் கண்டறியப்பட்டது. அவை Kanlow, Southlow, kuru பயிர் வகைகள் ஆகும். இந்த பயிர் வகைகள் ஓக்லஹோமா (Oklahoma), தெற்கு இல்லினாய்ஸ் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது. அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்ற பயிராக இவை இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

https://www.sciencedaily.com/releases/2016/02/160223132805.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version