Site icon Vivasayam | விவசாயம்

மரநாற்றுகளுக்கு உரமிடுதல்

தரமான நாற்றுகள் தான் வளமான அடிப்படை. நல்ல தரமான நாற்றுகளை நடுவதன் மூலம் பூச்சி, நோய் மூலம் ஏற்படும் பொருளாதாரச் சேதத்தைக் கட்டுப்படுத்தலாம். தரமான நாற்றுகளைத் தயாரிப்பதில் மண் முதன்மைப் பங்கு வகிக்கிறது. மண்ணின் பௌதிகத் தன்மை, இரசாயனத் தன்மை இவற்றைச் சமநிலைக்குக் கொண்டுவந்து உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும்.

மண் கலவை தயாரிக்க கலவை விகிதத்தில் ஒரு பங்கு தொழு உரத்திற்குப் பதிலாக மக்கிய தென்னைநார்க் கழிவுகளையுப் பயன்படுத்தித் தயாரிக்கும் மண் கலவையில் வளரும் மரக்கன்றுகள் வறட்சியைத் தாங்கி நன்கு வளரக்கூடிய தன்மையைப் பெறுகின்றன.

தரமான மரக்கன்றுகளைத் தயாரிப்பதில் இயற்கை உரங்கள் மற்றும் இரசாயன உரங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பேரூட்டங்களான தழைச்சத்து, சாம்பல் சத்து இவற்றை முறையே 1 லட்சம் நாற்றுகளுக்கு 9:18:9 கிலோ என்ற விகிதத்தில் அளித்து பிறகு 2 சதம் டைஅமோனியம் பாஸ்பேட்டை இலை வழியாக நட்ட 30 மற்றும் 60வது நாளிலும் மரக்கன்றுகளுக்கு அளிப்பதால் வளமான மரக்கன்றுகளைப் பெறலாம்.

மரங்களை வளர்ப்பதற்கு வெள்ளம், வெள்ளத்தினால் மண் அரிப்பு, களர் உவர் தன்மை, காற்று ஆகியவற்றில் எதோ ஒன்றிலோ, எல்லாவற்றிலோ பாதிக்கப்பட்ட தரிசு நிலங்கலையே விவசாயிகள் அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள்.

அமில மண்ணாக இருந்தால் மண் திருத்தியான சுண்ணாம்பைத் தேவையான அளவு உபயோகித்து மண்ணை சமநிலைக்குக் கொண்டு வந்து பயன்படுத்தலாம். களர் மற்றும் உவர் மண்ணாக இருந்தால் தேவையான அளவு ஜிப்சம் மண் திருத்தியை உபயோகித்து மண்ணைச் சமநிலைக்குக் கொண்டு வரலாம். அங்கக மண் திருத்திகளான நெல் உமி, மரங்களிலிருந்து உதிர்ந்த காய்ந்த சருகுகள், கோழி எரு, பன்றி எரு ஆகியவற்றை உபயோகித்தும் மண்ணைத் திருத்தலாம். மண்ணைச் சமநிலைக்குக் கொண்டு வந்தால் அதாவது மண்ணின் அமிலத்தன்மை 6.5 முதல் 7.0 வரை என்ற அளவுக்குக் கொண்டு வந்தால் ஊட்டச்சத்துக்களின் கிடக்கை இயற்கையிலேயே அதிகரிக்கும். ஊட்டச்சத்துக்களின் அளவு மரவளர்ச்சிக்குத் தேவையான அளவு இருக்கும்போது மரக்கன்றுகளின் உயரம், எடை, பருமன் குறிப்பிட்ட அளவு இருக்கும். இவ்வாறு பெறப்பட்ட தரமான மரக்கன்றுகள் வயலில் நட்டால் விரைவில் உயிர்பிடித்து மரம் நன்கு வளரும்; எல்லா மரங்களும் ஒரே சீராக வளர்ந்து அதிக விளைச்சலும், அதிக வருமானமும் கிடைக்கும்.

                                                                                              நன்றி

                                                                                    பசுமை விகடன்

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version