Site icon Vivasayam | விவசாயம்

காலநிலை மாற்றத்தால் பல்லுயிரிகளுக்கு பாதிப்பு

வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் (WCS) மற்றும் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் இணைந்து காலநிலையினை பற்றி ஆய்வு செய்ததில் அதிர்ச்சி தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. இவர்களின் ஆய்வுப்படி எதிர் காலத்தில் மக்கள் அதிக அளவு காலநிலை மாற்றத்தால்  பாதிப்பிற்கு உள்ளாவர்கள்  என்பது தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றத்தினை எதிர்கொள்ளும் வகையில், உலகம் முழுவதும் பல உள்ளூர் சமூகங்கள் வேகமாக, சில நேரங்களில் இயற்கை பேரழிவுகளினால் ஏற்படும் காலநிலை மாற்றத்தை சமாளிக்கும் வகையில் தங்கள் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று CSIRO-ன் முக்கிய ஆராய்ச்சி விஞ்ஞானியான டாக்டர் தாரா மார்ட்டின் கூறினார்.

தற்போது ஆப்பிரிக்காவில் காங்கோ பேசின் காடுகள் வறட்சியால் விவசாயத்திற்கு அகற்றப்படுகிறது. ஆஸ்திரேலியா மற்றும் கனடா காடுகள் பாதுகாப்பு இருப்புக்கள் காரணமாக  கால்நடைகளுக்கு உணவளிக்க வறட்சி நிவாரணமாக  பயன்படுத்துகின்றனர். தற்போது காடுகளின் அழிவால் பவள திட்டுகள் மெலனீசிய தீவுகளில்  அழிந்து வருகின்றன. காடுகள் அழிக்கப்படுவதால் புல்வெளிகள், ஈரநிலங்கள் மற்றும் பவள திட்டுகள் அழிந்து விடுகின்றன் இதனால் புயல் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிக பாதிப்பினை கொடுக்கிறது என்று டாக்டர் மார்ட்டின் கூறினார். பெரும்பாலும் காட்டு மரங்கள் மற்றும் பவள பாறைகள்தான் 97% புயல் வெள்ளத்தை கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக சதுப்பு நிலகாடுகள் அதிக அளவு இப்பணியினை செய்து வருகிறது.

ஆண்டு ஒன்றிற்கு சுமார் 100 மில்லியின் மக்கள் புயலினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று டாக்டர் ஜேம்ஸ் வாட்சன் கூறினார். இதனை தவிர்க்க சர்வதேச நாணய நிதியம் ஒரு சமீபத்திய அறிக்கையில் வருடத்திற்கு $ US5.3 டிரில்லியன் பணத்தினை உலக ஆற்றல் மானியத்திற்கு கொடுத்து வருகிறது. படிம எரிபொருள் மானியங்கள் 20 சதவீதம் உலக கார்பன் வெளியேற்றம் குறைக்க பயன்படுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சதுப்பு நில காடுகளினை பாதுகாக்க யுஎஸ்ஏஐடி போன்ற நிறுவனங்கள்  நிதியளிக்க முன் வந்துள்ளது.

http://www.sciencedaily.com/releases/2016/01/160128113840.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version