Site icon Vivasayam | விவசாயம்

புதிய பயிர் காப்பீட்டு திட்டம்

விவசாயத்தில் ஏற்படும் பயிர் சேதத்தை மனதில் கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அரசாங்கம் இந்த வாரம் விவசாயிகளின் உணவு பயிர்களுக்கு அதிகபட்ச பிரீமியமாக 2.5% காப்பீடு தொகை செலுத்தும் பயிர் காப்பீடு திட்டத்தை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பயிர் காப்பீட்டு திட்டத்திற்கு சமீபத்திய தொழில்நுட்பங்களான ட்ரோன், ஸ்மார்ட்போன், மொபைல் குறுஞ்செயலி மற்றும் செயற்கைக்கோள் ஆகியவை குறுகிய காலத்தில் பயிர் சேதத்தை மதிப்பிட்டு, உடனடியாக விவசாயிகளுக்கு பயிர் சேத காப்பீடு தொகை 25% வழங்க முன்மொழிகிறது.

தற்போது விவசாயிகள், திருத்தப்பட்ட தேசிய விவசாய காப்பீட்டுத் திட்டம் (MNAIS) மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர் காப்பீடு திட்டம் (WBCIS). என்ற இரண்டு பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், திட்டத் தொகையின் மீது அதிகபட்சமாக 15% பிரீமியம் செலுத்தி வருகின்றனர்.

இந்திய அரசுக்கு சொந்தமான வேளாண் காப்பீட்டு நிறுவனம், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிர் காப்பீடு, வழங்கும் ஒரு புதிய பயிர் காப்பீட்டு திட்டம் (NCIS)-ஐ கொண்டுவர ஆலோசனை செய்து வருகிறது. புதன்கிழமை(13.1.2016) முதல் NCIS திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்படி கோதுமை 1.5%, நெல் 2.5%, எண்ணெய் வித்துக்கள் 2%, இதர தானியங்களுக்கு 2-2.5% வரை அதிகபட்ச பிரீமியம் கொடுப்பதாக வேளாண் அமைச்சகம் கூறுகிறது.

விவசாய அமைச்சக அதிகாரியின் கருத்துப்படி, மைய அரசின் பண மானியம் தற்போது ரூ .3,000 கோடியாக உள்ளது. அது சுமார் ரூ .7,000 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, நாட்டில் உள்ள 12 கோடி விவசாயிகளுக்கு இரண்டு கோடி மட்டுமே மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்தவுடன் இந்த நிலை மாறும் என்று அனைவரும் எதிர்பார்க்கிறார்கள்.

http://www.financialexpress.com/article/economy/new-crop-insurance-scheme-to-be-announced-this-week/191732/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version