Site icon Vivasayam | விவசாயம்

ஆர்கானிக் நைட்ரஜன் மண்ணை வளமாக்குகிறது

சீன ஆராய்ச்சியாளர்கள் தாவரம் பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் ஆர்கானிக் நைட்ரஜன் உரம் தாவர வளர்ச்சிக்கு அதிக அளவு உதவுகிறது என்பதை கண்டறிந்துள்ளனர். நைட்ரஜன் தான் தாவர வளர்ச்சிக்கு தேவையான ஆற்றலை அதிக அளவு அளிக்கிறது. தற்போது உலக அளவில் இது விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த நைட்ரஜன் மண்ணை வளமுள்ளதாகவும் மற்றும் நிலத்தடிநீரை தூய்மையாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது.

கடந்த மூன்று வருடங்களாக மேற்கொண்ட ஆராய்ச்சியில் மண்ணின் தரத்தை மேம்படுத்தவும் மற்றும் பசுமை குடிலை தூய்மையாக பராமரிக்கவும். இந்த இயற்கை நைட்ரஜன் உதவுகிறது. இந்த நைட்ரஜன் அளவு மண்ணில் அதிக அளவு இருப்பதால் தக்காளி மற்றும் வெள்ளரிக்காய் வளர்ச்சிக்கு செயற்கை உரம் தேவையே இல்லை. மேலும் அறிவியல் அறிஞர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தற்காலிகமாக கிடைக்கும் நைட்ரஜன் ஆற்றல் மண்ணில் ஆர்கானிக் நைட்ரஜனை உருவாக்குகிறது. இது மண்ணில் குறையும் நைட்ரஜனை சமநிலைப்படுத்துகிறது. இந்த தகவலை HortScience  கடந்த நவம்பர் 2015-ம் ஆண்டு வெளியிட்டது.

காய்கறி செடிகள் அதிக அளவு வளர்ப்பதால் உயிரி உரம் அதிக அளவு கிடைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அவர்கள் நடத்திய 3 வருட ஆராய்ச்சியில் காய்கறி வளர்க்கும் காலங்களில் அதிக அளவு நைட்ரஜன் ஆற்றல் மண்ணிற்கு கிடைக்கிறது தெளிவாக தெரிந்துள்ளது.

 http://www.sciencedaily.com/releases/2016/01/160104163706.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

 

 

Exit mobile version