Vivasayam | விவசாயம்

சதுப்பு நிலக்காடுகள் அழிந்து வருவதால், உணவு உற்பத்தியில் பாதிப்பு

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் உள்ள சதுப்புநிலக்காடுகள் அழிந்து வருவதால் நெல் மற்றும் எண்ணெய் வித்துக்களின் தாவரங்களுக்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2000 மற்றும் 2012-ம் ஆண்டுகளுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆய்வில், சதுப்புநிலக்காடுகள் அதிக அளவு பாதிக்கப்பட்டதால் 38% நெல் மற்றும் எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்த காடுகள் தற்போது அழிந்து வருவதால் எரிபொருள் மற்றும் மீன் இனங்களுக்கு அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது கார்பன் அளவும் அதிகரித்துள்ளது என்று தேசிய அறிவியல் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் உள்ள சதுப்புநிலக்காடுகள் பெரும் பகுதி பாதிப்பிற்குள்ளாகி உள்ளதாக National University of Singapore-ன் ஆய்வாளரான டேனியல் ரிச்சர்ட்ஸ் கூறினார். 1970 முதல் 2000 ஆண்டு வரை 8 நாடுகளில் இருந்த சதுப்புநிலக்காடுகள் 54% குறைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2

இந்த பாதிப்பில் அதிக அளவு அழிந்து வருவது மீன்களே ஆகும். இதனை பற்றி மேலும் 2000 மற்றும் 2012-ம் ஆண்டுக்கு இடையில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெற்கு ஆசிய நாடுகளில் 30% சதுப்பு நிலக்காடுகள் அழிந்திருப்பது தெரியவந்துள்ளது.

சதுப்பு நிலக்காடுகள் அழிவதால் ஏற்படும் பாதிப்புகள்:

இந்த காடுகளின் தாவரத்தின் வேர் பகுதி, அலைகள் அதிகம் ஏற்படாமல் தடுக்கிறது.

120 நாடுகளின் கடற்கரை பகுதிகளில் சுத்தமான காற்றை அழித்து வருகிறது. இந்த காடுகள் அதிக அளவில் இருந்தால் உப்பு படிகம் அதிக அளவு உற்பத்தியாகும்.

தற்போது இந்த காட்டிற்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பால் மேற்கண்ட நன்மைகள் அனைத்தும் கிடைப்பதே இல்லை.

தற்போதைய கணக்கெடுப்பின்படி மியான்மர் பகுதியில் உள்ள 25,000 ஹெக்டர் காடுகள் அழிந்துள்ளதாக ரிச்சர்ட்ஸ் கூறினார். சிங்கப்பூரிலுள்ள சதுப்புநிலக்காடுகள் 90% அழிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

http://www.bbc.com/news/science-environment-35198675

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version