Site icon Vivasayam | விவசாயம்

கோதுமை வளர்ச்சிக்கு பூஞ்சைகள் உதவுகிறது

ஆர்ஃபஸ் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பூஞ்சைகளை பற்றி ஆராய்ச்சி செய்ததில் நன்மை தரும் தகவல் நமக்கு கிடைத்துள்ளது. தாவரத்தின் வேர்ப்பகுதிகளில் பூஞ்சைகள் தொற்று இருந்தால் அது வறட்சி காலங்களில் கோதுமை பயிர் நன்றாக வளர்வதற்கும் மற்றும் மகசூல் அதிக அளவு கிடைப்பதற்கும் வழிவகுக்கிறது என்பதினை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக கோதுமை உற்பத்தி பாதிப்பு அடைகிறது. இதனை தவிர்ப்பதற்கு மிக சிறந்த தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் அவ்வப்போது தந்த வண்ணம் உள்ளனர். தற்போதைய நிலவரப்படி வறட்சி காலங்களில் உலகளவில் கோதுமை விளைச்சல் 30-60 சதவீதம் பாதிப்படையும் என்று ஐ.நா. கூறியுள்ளது. இதனை தடுப்பதற்கு பூஞ்சைகள் மிகவும் உதவியாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக Arbusacular மைக்கோரைஸா பூஞ்சை கோதுமை வளர்ச்சிக்கு வறட்சி காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும் என்பதினை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியின்படி  பூஞ்சைகள் வேர்களுக்கு ஏற்ற கனிம சத்துக்களை வழங்குவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பூஞ்சைகள் வேர்சூழ் பூசனத்துடன் இணைந்து பயிர்களுக்கு ஏற்படும் நோய் மற்றும் பூச்சிகளை அழித்து வருகிறது. பெரும்பாலும் இந்த பூஞ்சைகள் வறட்சி காலத்தில் கோதுமை பயிர்கள் நன்றாக வளர்வதற்கு ஏற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரினை வழங்குகிறது.

தற்போது விஞ்ஞானிகள் இரண்டு கோதுமை வகைகளை அறிமுகப்படுத்தி உள்ளனர். முதலாவது, தண்ணீர் காலங்களில் வளரும் பயிர் வகைகளை பயிரிடுவது,  இரண்டாவது வறட்சி காலத்தில் உதவும் கோதுமை பயிர் (kloka WM1353) இந்த கோதுமை வகை வறட்சி காலத்தில் நைட்ரஜன் மற்றும் ஒளிச்சேர்க்கை அளவினை அதிகப்படுத்தி மகசூலினை பெற வழிவகுக்கிறது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பெரும்பாலும் இந்த கோதுமை பயிர்கள் பூஞ்சைகளை நம்பியே வளர்ந்து வரும்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151217114952.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version