Site icon Vivasayam | விவசாயம்

புல் பகுதிகளில் மண்ணின் தரம் குறைகிறது

எலிசபத் கார்லிஸ்லி ஆராய்ச்சியாளர்கள் புல்லை பற்றி மேற்கொண்ட ஆராய்ச்சியில் வியக்கத்தக்க தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது. அது என்னவென்றால் புல் பகுதியில் உள்ள மண் தன்னுடைய தன்மையை இழந்து வருகிறது என்பதாகும்.

ஏனென்றால் புல் உள்ள பகுதிகளில் இறந்த தாவரம் மற்றும் இறந்த விலங்குகளின் சத்துகள் அப்படியே மண்ணுக்கு அடியில் ஆழமாக புதைந்துவிடுகிறது. இதற்கு முக்கிய காரணம், கால்நடைகளை புல் உள்ள பகுதியில் மேய்ச்சலுக்கு விடுவதால் அழுத்தத்தின் காரணமாக மண்ணின் சத்துகள் அப்படியே உள்ளேயே இறுகி விடுகிறது.

அதுமட்டுமல்லாது புல் உள்ள பகுதியில் சரியான ஆக்ஸிஜன் இல்லாத காரணத்தால் மண் அதிக அளவு வெப்பத்தை அடைகிறது.  இதனால் அந்த பகுதியில் எந்தவித விவசாய  நடவடிக்கையும் நம்மால் மேற்கொள்ள முடியாது. குளிர்காலத்தில் மண்ணின் அடுக்கில் குறைந்த அளவு கார்பன் ஆற்றல் மட்டுமே கிடைப்பதால் மண் விவசாயத்திற்கு ஏற்றதாக அமைவதில்லை. பொதுவாக புல் உள்ள பகுதியில் அதிகமான வெப்பம் மண்ணிற்கு ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி விவசாயத்திற்கு ஏற்ற பகுதியாக இருப்பதில்லை.

புல் அதிக நெருக்கத்தில் இருப்பதால் மண்ணிற்கு சரியான ஆக்ஸிஜன் கிடப்பதில்லை. இதனால் அதிகமான வெப்பம் அடைந்து மண்ணில் உள்ள நன்மை தரும் பாக்டீரியாக்கள் அழிந்து விடுகிறது.

http://www.sciencedaily.com/releases/2015/12/151216162239.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version