Vivasayam | விவசாயம்

வறட்சியால் வாடும் எத்தியோப்பியா

உலகில் பெரும்பாலான நாடுகள் தண்ணீரால் பாதிப்பு அடைந்து வருகிறது. இந்த பாதிப்பு மட்டும் உலகில் ஏற்படுவதில்லை. தற்போது உலகில் அதிகமான பாதிப்புகள் வறட்சியினால் மட்டுமே ஏற்படுகிறது என்று ஐ.நா கூறுகிறது. வறட்சி பாதித்த நாடுகளிலேயே மிக மோசமானது எத்தியோப்பியா நாடாகும் என்று ஐ.நா. கூறுகிறது.

2

ஐ.நா-வின் தகவலறிக்கையின்படி எத்தியோப்பியாவில் 8.2 மில்லியன் மக்கள் உணவு இல்லாமல் வரும் 2016-ம் ஆண்டு பாதிக்கப்பட உள்ளதாக கூறி உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 90% உணவு தட்டுப்பாடு அந்நாட்டில் ஏற்பட்டுள்ளது.

இதனை சமாளிக்க எத்தியோப்பிய அரசு சுமார் 130 மில்லியன் பணம் ஒதுக்கி உள்ளது. ஆனால் இது போதுமானதாக இருக்காது, அந்நாட்டின் உணவு தட்டுப்பாட்டை போக்க வேண்டுமெனில் சுமார் 330 மில்லியன் தேவை என்று ஐ.நா. அறிக்கை கூறுகிறது. ஐ.நாவின் தற்போதைய தகவலறிக்கைப்படி 15 மில்லியன் மக்கள் வருங்காலத்தில் வறட்சியினால் பாதிப்படைய உள்ளதாக கூறுகிறது.

http://www.bbc.com/news/world-africa-33502646

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version