Site icon Vivasayam | விவசாயம்

கோதுமையில் மரபணு மாற்றம்

லிவர்பூல் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் பயிர் வளர்ப்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்த புதிய மரபணு செயற்பாடுகளை கொண்டு மூலக்கூறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளனர். மரபணு குறியீடுகளை மாற்றாமல் அதன் செயல்பாடுகளான டிஎன்ஏ – வை இணைத்து எபிஜெனிடிக் இரசாயனத்தை பயன்படுத்தி எதிர்கால மரபணுவினை பாதுகாத்து கோதுமை வளர்ச்சியினை அதிகரிக்க உள்ளனர்.

இதற்கு ஒரே வழி சோடியம் Bisculphate சிகிச்சை மற்றும் இலக்கு வைக்கப்பட்ட மரபணு செறிவூட்டல் கலவையை பயன்படுத்தி கோதுமையின் மூன்று மரபுத்தொகுதியினை முழுவதும் பாதுகாப்பதே ஆகும்.

கோதுமையின் மரபணு எதிர்காலத்தை சிறப்புடன் செயல்பட வைப்பது மிகவும் சிக்கலான செயலாக தற்போது உள்ளது என்று டாக்டர் லாரா கார்டினர் கூறினார்.

கோதுமை ஜீனோம்களில் மெத்திலேஷன் வடிவங்கள் 0.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காணப்படுகிறது. இதனை அடிப்படையாக கொண்டே விஞ்ஞானிகள் புதிய மரபணுவினை கோதுமையில் செலுத்தி வளர்ச்சியினை அதிகரித்து உள்ளனர். உலகில் உள்ள மக்களுக்கு தினசரி கலோரியில் புரதம் 20% தேவை இதனை கோதுமை வழங்குகிறது.

தற்போது விஞ்ஞானிகள் கோதுமைக்கு ஏற்படும் நோய் தாக்கங்கள் மற்றும் அதிலிருந்து விடுபடும் முறைகளை பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151210031202.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version