Site icon Vivasayam | விவசாயம்

குறைந்த நீர்பாசனத்தில் அதிக விளைச்சல்

University of Florida Institute உணவு மற்றும் விவசாய அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் உருளைகிழங்கு நன்கு வளர 50% குறைவான நீர் பாசன முறை இருந்தால் அதன் மகசூல் அதிகரிக்கும் என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய நீர் பாசன முறையில் உருளைக்கிழங்கை வளர்த்தால் கண்டிப்பாக ஆண்டிற்கு லாபம் சம்பாதிக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்த பாசன முறைக்கு பெயர் ”கலப்பு மையச் சூழல் பாசன முறை” என்று அழைகப்படுகிறது. உருளைகிழங்கு வளர மூன்றில் இரண்டு பங்கு நீரை மழை தெளிப்பான் போன்று இயந்திரத்தை கொண்டு தெளிப்பது மற்றும் ஒரு பங்கு நீர் பாரம்பரிய முறையான நீர்பாசன முறையில் மேற்கொள்வது. இந்த ஆராய்ச்சியினை புளோரிடா உருளைக்கிழங்கு பண்ணையில் IFAS ஆராய்ச்சியாளர்கள் குழு மேற்கொண்டது.

இந்த முறையில் நீர்பாசனத்தை மேற்கொண்டால் சுமார் 55% நீர் மூன்று வருடங்களில் சேமிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த பாசன முறையில் உருளைக்கிழங்கை வளர்த்தால் மகசூல் பெருகும் மற்றும் தண்ணீர் சேமிக்கப்படும். இந்த புதிய பாசனமுறையில் சுமார் 1 பில்லியன் தண்ணீர் கலன்கள் ஆண்டிற்கு சேமிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பாசன முறைக்கு வேறு எந்த உபகரணங்களும் தேவையில்லை. இந்த  மைய சூழல் பாசன உபகரணத்திற்கு ஏக்கருக்கு $1000 மட்டும் செலவாகும்.

இதனை பல ஆண்டுகள் பயன்படுத்தலாம். தற்போது பசிபிக் வடமேற்கு விவசாயிகள் மையச்சூழல் பாசன முறையினை மேற்கொண்டுள்ளனர். இந்த பாசன முறை 1940-ல் கொலராடோ விவசாயிகளால் கண்டுபிடிக்கப்பட்டது. புளோரிடாவில் 90% நீர் நீர்தேக்கங்களில் இருந்து வருகிறது. இந்த பாசன முறையினை மேற்கொள்வதால் புளோரிடா விவசாயிகள் ஆண்டிற்கு சுமார் 351,000 டன் உருளைகிழங்கை உற்பத்தி செய்கின்றார்கள். இதில் மையச்சுழல் பாசனத்தின் மூலம் சுமார் 230,812 டன் உருளைக்குழங்கு கிடக்கிறதாம்.

http://www.sciencedaily.com/releases/2015/12/151201101309.htm

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version