Vivasayam | விவசாயம்

முதல் முறையாக விண்வெளியில் பூக்கும் தாவரங்கள்: நாசா

சமீப காலமாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சில அற்புதமான மற்றும் முக்கிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

புத்தாண்டை தொடர்ந்து சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள ஆய்வுக் கூடத்தில் முதல் முறையாக பூச்செடிகளை வைத்து வளர்த்து வருகிறது நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம்.

விண்வெளி வீரர் Kjell Lindgren சூரிய காந்தி இன செடியை விண்வெளியில் வளர்க்க முதல் அடியை எடுத்து வைத்தார். இந்த அமைப்பு  நவம்பர் 16 ஆம் தேதி இதை செயல்படுத்தியது.

4 (1)

காய்கறிகள் மற்றும் மலர்கள் விண்வெளியில் வளர்ப்பதை ஒப்பிட்டுப் பார்க்கும்போது, வெளிச்சம் மற்றும் பிற காரணிகள் முக்கியமானவை என கூறி இதை விண்வெளியில் வளர்ப்பது மிகவும் கடினமாக இருக்கிறது என்றும் கூறினார். சிவப்பு romaine கீரை ISS இல் சுமார் ஒரு மாதத்தில் வளர்ந்துவிடும் ஆனால் சூரிய காந்தி இன செடியை (zinnias) வளர்க்க 60 நாட்கள் ஆகும். அதாவது கீரை வளர எடுத்துக்கொள்ளும் நேரத்தை போல் இருமடங்கு ஆகும் என்று நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் பேலோடு விஞ்ஞானியாளர் Gioia Massa கூறினார்.

மேலும் இங்கு சிவப்பு, நீலம் மற்றும் பச்சை LED விளக்குகள் 10 மணிநேரம் வெளிச்சத்திலும் 14 மணிநேரம் அணைத்தும் வைக்கப்படுகிறது. ஊட்டச்சத்து மற்றும் நீர் கொடுத்து தாவர வளர்ச்சியை கண்காணித்து வருகின்றனர்.

இந்த முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, வரும் 2017ம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் தக்காளிச் செடியை நட்டு பரிசோதனை செய்யவும் நாசா திட்டமிட்டுள்ளது.

http://www.natureworldreport.com/2015/11/nasa-to-grow-flowering-plants-in-space-for-first-time/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version