Site icon Vivasayam | விவசாயம்

வெப்பமயமாதலை தடுக்க திட்டம் : ஐ. நா!

ஐ. நா. தற்போது 146 நாடுகளினால் சமர்பிக்கப்பட்ட காலநிலை மாற்றத்தை பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் உலக வெப்பமயமாதலை குறைக்க தேசிய திட்ட மதிப்பீட்டினையும் வெளியிட்டுள்ளது. ஐ. நா. குறிபிட்டுள்ள 2C  இலக்கை அடைய அனைத்து நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றது.

இந்த ஆண்டு தேசிய காலநிலை திட்ட கூட்டம் வரும் டிசம்பர் மாதம் பாரிசில் நடக்க உள்ளது. உலக நாடுகள் கார்பன் குறைப்பு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு ஏற்றுக்கொண்டாலும் இன்றளவும் அது வெற்றி அடையவே இல்லை. எனினும் இந்த பாதிப்பானது வரும் 2100-ம் ஆண்டில் குறையும் என்றும் அதனால் கார்பனின் அளவு 2.7C  அளவு குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் கடந்த டிசம்பர் கூட்ட தொடரில் இதனை 3.1C அளவிற்கு குறைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டு இருந்தது. எனவே இந்த ஆண்டு நடைபெறும் கூட்டத்தில் 191-க்கும் அதிகமான நாடுகளின் பிரதிநிதிகளை கொண்டு உலக வெப்பமயமாதலை தவிர்க்க ஒரு புதிய ஒப்பந்தத்தை பற்றி விவாதிக்க உள்ளதாக ஐ. நா. கூறுகிறது. ஐ. நா. அறிக்கையின் முக்கிய நோக்கம் 2030-ல் தனிநபர் மாசுவினை 9% வீழ்த்த வேண்டும் என்பதேயாகும். வளிமண்டலத்தில் CO2 அளவு குறைந்தாலும் கார்பன் அளவானது அடுத்த 15 ஆண்டுகளில் அதிகரிக்க கூடும் என்று ஐ. நா அறிக்கை கூறுகிறது. 2010-ம் ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது 2030-ல் மொத்த மாசு கட்டுப்பாட்டில் 22% அதிகரிக்கும் என்று ஐ. நா. தகவலறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த நிலவரப்படி நாம் இன்னும் நம்முடைய இலக்கை அடையவே இல்லை என்பது பற்றி தெளிவாக தெரிகிறது என ஐ. நா. கூறுகிறது.

மேலும் இந்த உலக மாசுபடுதலை தடுக்க வளர்ச்சி பெற்ற நாடுகளின் 25% பங்களிப்பு கண்டிப்பாக அவசியம். இவ்வாறு  இருந்தாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் கார்பனின் அளவு குறைந்துள்ளது என்பது நமக்கு ஆறுதல் தரும் விஷயமாக உள்ளது. தற்போதைய சூழலில் சீனா, தென் ஆப்பிரிக்கா மற்றும் சிங்கப்பூரில் தான் மாசுக்களின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதுமட்டுமல்லாது பூட்டான், எத்தியோப்பியா, கோஸ்டாரிகா போன்ற மிகச்சிறிய நாடுகள் கூட தற்போது மாசுபடுதலை தடுக்க மிகப்பெரிய புரட்சியினை மேற்கொண்டு வருகின்றது.

http://www.bbc.com/news/science-environment-34668957

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Exit mobile version