Site icon Vivasayam | விவசாயம்

புதிய வகை கோழி இனம்   

மத்தியப் பிரதேசத்தில் உள்ள A veterinary university-ல் உள்ளவர்கள் நோய் எதிர்ப்பு சக்தி அடங்கிய புதிய இன கோழியை உருவாக்கியுள்ளனர். இந்த கோழி விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் அறிவித்துள்ளனர்.

ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள Nanaji Deshmukh Veterinary Science University – ல் இந்த புதிய இன கோழியை உருவாக்கியுள்ளதாக  varsity’s Professor O P Shrivastava தெரிவித்துள்ளார்.

இந்த கோழிகளில் புரதச்சத்து அதிகம் இருக்கிறது என்று கூறுகிறார்கள். இந்த கோழிக்கு   ‘நர்மதா நிதி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. நம் வீட்டுக்கோழி 45 முட்டைகள் தான் இடும். ஆனால், நர்மதா நிதி வருடத்திற்கு 181 முட்டைகள் வரை இடக்கூடியவை  என்று Shrivastava கூறுகிறார்.

தற்போது, கடைகளில் நாட்டுக்கோழி முட்டைகள்  ரூ.6-க்கு  விற்கப்படும் நிலையில், இந்த கோழி முட்டைகள்ரூ. 4 -க்கே கிடைக்கும். மேலும், தற்போதைய சந்தை விலையின்படி, ஒருகிலோ கோழி இறைச்சியின் விலை 120 ரூபாயாக உள்ளது. ‘நர்மதா நிதி’ கோழிகளை பண்ணை முறையில் வளர்த்தால் ஒருகிலோ இறைச்சி 80-90 ரூபாய்க்கு கிடைக்கும் என  Shrivastava தெரிவித்துள்ளார்.

இந்த புதிய இன கோழி கிராமங்களில் உள்ள ஏழை குடும்பங்களுக்கு, மிகவும் மலிவானதாக இருக்கும் என்பதை நம்புகிறோம் என்று Shrivastava கூறினார்.

http://economictimes.indiatimes.com/news/science/cheaper-disease-resistant-chicken-breed-developed-in-madhya-pradesh/articleshow/49592144.cms

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

Exit mobile version