Vivasayam | விவசாயம்

எதிர்கால டிராக்டர்!

இது வரை யாரும் கண்டிராத புதிய வகை டிராக்டரை  Prithu Paul வடிவமைத்துள்ளார். இந்த டிராக்டரை முதலில் பார்க்கும் போது நம்மால் டிராக்டர் என்று நம்பவே முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இந்த மாதிரியான டிராக்டர் தான்  இருக்க போகிறது என்று  Prithu Paul  கூறினார்.

4 (1)

இந்த டிராக்டர்  2020 -ம் ஆண்டு விற்பனைக்கு வரும்  என்று வடிவமைப்பாளர் கூறினார். இந்த டிராக்டரில் டீசல் என்ஜினுக்கு பதிலாக , ஹைட்ரஜன் இயந்திரங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும்,  இந்த டிராக்டரை  பெரிய அளவிலான நடவு செய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக வடிவமைப்பாளர்  கூறினார்.

சோலார் பேனல்கள்  வழியாக  சூரிய ஆற்றல் செல்வதற்காக இந்த  டிராக்டரில் சிறப்பு சென்ஸார்கள்   பொருத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது, கூடுதலாக, இந்த டிராக்டரில்  இரவு நேரப் பார்வைக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனால்,  இந்த டிராக்டரை 24 மணி நேரமும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒரு மனிதன் உள்ளே இருந்து இயக்க கூடிய வகையில் இந்த டிராக்டரை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வடிவமைப்பாளர் Prithu Paul கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version