Vivasayam | விவசாயம்

நிலத்தடி நீரை கண்டுபிடித்தல்

பூமிக்கு அடியில் உள்ள நிலத்தடி நீரானது எப்போதும் பாறை இடுக்குகளிலே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் தண்ணீரினை கண்டுபிடிக்க மிகச்சிறந்த வழி பூமியில் ஆழ்துளை இடுவதே ஆகும். இவ்வாறு செய்தால் மட்டுமே பாறை படுக்கையில் உள்ள நீரானது வெளிவரும் என்று கூறுகின்றனர். இவ்வாறு நாம் ஆழ்துளை மூலம் நீரை கண்டுபிடிக்கும்போது பூமியின் மாதிரிகளை அதாவது மண்ணின் தரத்தை துளை இயந்திரம் நமக்கு வெளிக்கொண்டு வந்து காட்டும். இதன் மூலம் இந்த பகுதியில் நீர் நிலைகள் இருக்குமா? இல்லையா? என்பதை நாம் கண்டறிந்து விடலாம் என்று கூறுகின்றனர். ஏனென்றால் பெரும்பாலான நிலத்தடி நீர் சுண்ணாம்புக்கல் உள்ள பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகிறது. துளையிடும் இயந்திரத்தை கொண்டு துளைப் போட்ட பகுதிகளில் குழாயினை விட வேண்டும். இந்த குழாயானது பூமிக்கு அடியில் உள்ள தண்ணீரை மண் மற்றும் பாறைகளின் அழுத்தத்தின் செயலினால் பூமிக்கு மேலே கொண்டுவருமென்று  கூறுகின்றனர்.

2

அதன் பிறகு துளையின் வழியாக செலுத்தப்பட்ட குழாயை கொண்டு நிலத்தடி நீரின் அளவினை மிக எளிதாக நாம் கண்டுபிடித்துவிடலாம். பின்னர் அந்த தண்ணீரை பகுப்பாய்வு செய்து, நீரின் ஓட்டத்தை பூமிக்கு மேல் நோக்கி செல்ல அழுத்தத்தை கொடுக்க வேண்டும். இவ்வாறு ஆழ்துளை கிணறுகள் தோண்டுவதால் சுரங்கம், மற்றும் குகைகள் உருவாகி பல்வேறு நன்மைகளை நமக்கு கொடுக்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். நிலத்தடி நீரின் தரத்தை கண்டறிய மேலே உள்ள படமானது நமக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version