Site icon Vivasayam | விவசாயம்

நிலத்தடி நீர் மழையினால் உருவாகிறது

பெரும்பாலும் பூமிக்கு அடியில் உள்ள நீர் மழையினால் உருவானதே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இதனை ஒரு வரைபடத்தின் மூலம் காட்டி உள்ளனர். அதில் மழை பொழிந்து அந்த நீரானது பூமிக்கு அடியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று தங்குகிறது என்று காட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, வந்து சேரும் நீரானது மண் மற்றும் பாறைக்கு இடையில் அதிகமாக காணப்படுகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பூமிக்கு அடியில் பாறைகளில் உள்ள மண் துகள்களின் மேற்பரப்பில் நீர் நிலைகள் உருவாகின்றன. இவ்வாறு சென்றடையும் நீர் பாறை படுகைகளினால் நன்னீராக மாற்றப்படுகிறது. பாறைபடுகைகளில் உள்ள மணல் அதிகமான தண்ணீரை தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் அதிகரிக்கிறது.

மேற்பரப்பு நீரை ஒப்பிட்டு பார்த்தால் நிலத்தடி நீர் அதிக அழுத்த தன்மை கொண்டதாக பாய்ந்து வருகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக நிலத்தடி நீரின் பாயும் தன்மை, நிலத்தடி வெளியேற்ற பகுதியை நோக்கியே செல்லும் என்று கூறுகின்றனர். இங்கு கொடுக்கப்பட்ட வரைபடத்தில் நிலத்தடியில் உள்ள  நீரானது மண்துகள்களினால் ஈர்க்கப்பட்டு பாறை மற்றும் மண்ணினால் அழுத்தம் தரப்பட்டு பாறை இடுக்குகளின் மூலம் வெளியேறுகிறது. அத்துடன் இந்த செயல் நின்றுவிடவில்லை. இவ்வாறு உருவாகும் தண்ணீர் நீர் நிலைகளுக்கு பரவுகின்றது. அவ்வாறு ஊடுருவி பாயும் தண்ணீரானது பல்வேறு படிநிலைகளை கடந்து கடைசியாக மண் மற்றும் பாறைகளின் அடியில் தனிமைப்படுத்தப்பட்ட நீர்நிலைகளாக உருவாகிறது.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version