Site icon Vivasayam | விவசாயம்

ஒலிகள் மூலம் நீரை கண்டுபிடிக்கலாமா?

பூமியினுள் அனுப்பப்படும் குழாயின் அதிர்வினை வைத்துக் கொண்டே நீரினை அளவிட முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவற்றிர்க்கு பல காரனிகள் உள்ளன. அவை,

  1. குழாயின் நீர் அழுத்தம்
  2. குழாயின் தரம் மற்றும் அதன் விட்டம்.
  3. மண்வகை மற்றும் மண் சுருக்கம்
  4. குழாய் மீது மண் ஆழம்
  5. மேற்பகுதி, புல், தளர்வான மண், கருங்காரை

நிலத்திற்கு அடியில் செலுத்தப்படும் குழாயில் கசிவு ஒலி உரசல் மற்றும் குழாயில் உள்ள நீர் அழுத்தமும் ஒரே விகிதத்தில் இருக்கும். இரும்பு, தாமிரம், எஃகு குழாய் போன்றவற்றில் நீர் கசிவு அதிக  ஒலியினை கொடுக்கும். சிறிய விட்ட குழாய்கள் தான் அதிக அளவு அலைவரிசை ஒலியினை நமக்கு கொடுக்கும். மணல் மண் மற்றும் தளர்வான மண்ணில் நீர் கசிவின் ஒலி அதிக அளவு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதாவது நெருக்கமான மண் சிறந்த நீர் கசிவின் ஒலியினை கொடுக்கும் என்று கூறுகின்றனர்.

7 அல்லது 8 அடி ஆழமான குழாய்கள்  பூமியில் விடுவதால் நீர் அழுத்தம் மற்றும் மிக அதிக நீர் கசிவினை நாம் உணர முடியும் என்று கூறுகின்றனர். மைக்ரோபோனை பயன்படுத்தி நிலத்தின் மேல் 3 முதல் 4 அடி வரை சோதனை செய்து பார்த்தால் நீர் ஓடையின் ஒலி நமக்கு தெளிவாக கேட்கும் என்று கூறுகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version