Site icon Vivasayam | விவசாயம்

மரங்களிலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை உருவாக்கலாமா?

அறிவியல் அறிஞர்கள் தற்போது சிறந்த ஆற்றல் சேமிப்பு சாதனத்தை தாவரம், பாக்டீரியா, பாசிகள், மரங்கள் மூலம் உருவாக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். அதிலும் மரத்திலிருந்து சிறந்த ஆற்றல் சேமிப்பை நாம் இயற்கையாகவே பெற முடியும் என்று ஆராய்ச்சி செய்து நிரூபித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பினால் சிறிய மின்விநியோகம் மற்றும் மின்சார வாகனங்களில் உயர் சக்தி மின்னணுவினை உற்பத்தி செய்ய பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஆராய்ச்சியாளர்களின் முதன்மையான இலக்கு நிலையான வழியில் தற்போது மற்றும் எதிர்கால தொழில்நுட்ப சக்திக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும் என்பதேயாகும். இந்த வகை ஆற்றல் சேமிப்பு சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் விதத்திலேயே இருக்கும் என்று க்ரான்ஸ்டன் கூறினார்.

மரங்களில் அதிக அளவு  நானோசெல்லுலோஸ் பொருட்கள் இருப்பதால் ஆற்றல் சக்தியினை உருவாக்க இது பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாது இந்த நானோசெல்லுலோஸ் முப்பரிமாண ஆற்றல் சேமிப்பு சாதனமாக செயல்படும் என்று கூறுகின்றனர்.

இந்த வகை மர நானோசெல்லுலோஸ் ஆற்றல் சேமிப்பு சாதனம் அதிக அடர்த்தி, ரீசார்ஜபுள் பேட்டரிகளை ஒப்பிடும்போது இந்தவகை சாதனம் நிலையான மின்தேக்கி சாதனங்களை தயாரிக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறைந்த எடை கொண்ட சாதனமாக இருப்பதால் மின்சார வாகனங்களில் மிக எளிதாக இதனை பயன்படுத்த முடியும், இந்த வகை ஆற்றல் சேமிப்பு சாதனம் மிக விரைவாக ஆற்றலை சேமித்து தகுந்த நேரத்தில் ஆற்றலை மின்சார வாகனத்திற்கு கொடுக்கிறது.

இந்த ஆராய்ச்சியினை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜிட்டோமிர்ஸ்கை“ இந்த ஆராய்ச்சி புதிய சிந்தனைகளை உருவாக்க ஆணிவேராக அமையும் என்று கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version