Vivasayam | விவசாயம்

தாமரை விதையின் நன்மைகள்

தாமரை விதைகளை சமைத்தும் சாப்பிடலாம் சமைக்காமலும் சாப்பிடலாம். தமரையை பயிரிடுபவர்கள் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் அறுவடை செய்வார்கள், பின்னர் அதை வெயிலில் காயவைப்பார்கள்.

தாமரை விதைகள் சீன மருத்துவத்தில் ஊட்டச்சத்து மிக்கதாகவும் குணப்படுத்தும் பண்பு மிக்கதாகவும் உள்ளது. மேலும் மூலிகைகள் தயார் செய்யவும் தாமரை விதைகள் பயன்படுகிறது.

11

தாமரை விதையில் புரதம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நல்ல வளமான ஆதாரங்கள் இருக்கிறது. மேலும் இதில் கொழுப்பு குறைவாகவும் நிறைவுற்றதாகவும் இருக்கும். தாமரை விதைகளில் நல்ல புரதம் இருப்பதால் சீனர்கள் இதில் சூப் செய்து பருகுகின்றனர்.

தாமரை விதைகள் மூப்படைவதற்கு எதிரான பண்புகளை கொண்டிருக்கிறது. இது மூப்படைவதற்கு எதிரான L-isoaspartyl என்ற நொதியை கொண்டுள்ளது.

தர்ம நந்தா என்ற தாமரை விதைகள் குறிப்பிட்ட சிறுநீரக பிரச்சனையை சரி செய்கிறது. மேலும் இது உடலில் உள்ள முக்கிய ஆற்றலை மீட்க உதவுகிறது. இந்த விதைகள் பாலியல் வகையான சிகிச்சை முறைக்கு பயன்படுகிறது.

சீன நிபுணர்கள் இது மண்ணீரலுக்கு ஊட்டமளிக்கிறது என்றும் வயிற்றுபோக்கை போக்குகிறது என்றும் கூறுகின்றனர்.

தர்ம நந்தா என்ற தாமரை விதைகளுக்கு மயக்க மருந்து பண்புகள் உண்டு என்று கருதுகிறார்கள். அதனால் இது தூக்கமின்மை அமைதியின்மை சிகிச்சைக்கு பயன்படுகிறது.

தியான் தாமரை விதைகள் சீன மருத்துவத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த தாமரையின் கரு மற்றும் விதைகள் கசப்பாகவும் குளிர்ச்சியாகவும் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. இது இரத்த நாளங்கள் விரிவடையவும் உதவுகிறது. இதனால் வலிப்பு வருவது குறைக்கப்படுகிறது.

http://www.livestrong.com/article/179060-the-benefits-of-lotus-seeds/

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version