Vivasayam | விவசாயம்

பர்ட்டாக் வேரின் நன்மைகள்!

பர்ட்டாக் வேர் நிலத்தடி கிழங்கு வகையை சார்ந்தது. இந்த வேர் காய்கறி மற்றும் மருத்துவ மூலிகையாக பயன்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. முந்தைய காலங்களில் இந்த தாவரத்தினுடைய வேர் மூலிகைக்காக சாகுபடி செய்து வந்தார்கள். அனைத்து பகுதிகளிலும் இந்த தாவரம் எளிதாக வளரக்கூடிய தன்மை வாய்ந்தது.

21

பர்ட்டாக் தாவரம் ஒரு மீட்டர் உயரம் வரை வளரும். இந்த தாவரத்தின் இலைகள் பரந்த, இதய வடிவில் இருக்கும். பூ சிவப்பு ஊதா நிறத்தில் இருக்கும்.

தண்டின் நீளம் 2 – 3 அடி இருக்கும். இந்த வேர் கேரட் அல்லது பாசினிப்பின் போன்று மெல்லிய வடிவத்தில் , பழுப்பு நிறத்தில் இருக்கும்.

பர்ட்டாக் வேரின் சுகாதார நலன்கள்:

  1. பர்ட்டாக் வேரில் அதிகமாக நோய் எதிப்பு தன்மை உள்ளது. அதுமட்டுமல்லாது நோய் தடுக்கும் ஆற்றலை கொண்டது.
  2. பர்ட்டாக் வேரில் கலோரி மிகவும் குறைவாக உள்ளது. 100 கிராம் வேருக்கு 72 கலோரியை வழங்குகிறது. இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு, உடல்-எடை, மற்றும் கொழுப்பின் அளவை குறைக்க இந்த வேர் உதவுகிறது.
  3. பர்ட்டாக் வேரில் குறிப்பாக எலக்ட்ரோலைட் பொட்டாசியம் அதிக அளவு இருக்கிறது . சோடியம் குறைந்த அளவே இருக்கிறது.
  4. பொட்டாசியம், செல் மற்றும் உடல் திரவங்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. இது இதய துடிப்பு மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.
  5. இந்த மூலிகை வேர் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியமாக இருக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம், ரிபோப்லாவின், பைரிடாக்சின், நியாஸின், வைட்டமின்-ஈ, மற்றும் வைட்டமின் சி உட்பட பல முக்கிய வைட்டமின்கள் இருக்கிறது . மனித உடலில் ஏற்படும் நோய், புற்றுநோய் மற்றும் நரம்பியல் நிலைகளுக்கு வைட்டமின் C மற்றும் E இயற்கையாகவே இந்த வேரில் இருக்கிறது.
  6. இரும்பு, மாங்கனீசு, மெக்னீசியம் போன்ற சில மதிப்புமிக்க துத்தநாகம், கால்சியம், செலினியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்கள் அடங்கியுள்ளது.

மருத்துவப் பயன்கள்:

  1. பர்ட்டாக் வேர் இரத்த சுத்திகரிப்பிற்கு சிறந்த மூலிகையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரத்தத்தில் இருக்கும் நச்சு பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்ற இந்த வேர் மிகவும் உதவியாக இருக்கிறது.
  2. தோல் பிரச்சனை சிகிச்சைக்கு இந்த மூலிகை பயன்படுத்தப்பட்டு வருகிறது. கல்லீரல் மற்றும் பித்தப்பைக்கு இந்த மூலிகையை பயன்படுத்துகிறார்கள்.
  3. பர்ட்டாக் விதைகள் தொண்டை மற்றும் மார்பு வியாதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
  4. பர்ட்டாக் இலை மற்றும் தண்டுகள் பசியின்மையை தூண்டுகிறது. மேலும் அஜீரணத்திற்கு சிறந்த தீர்வாக இருக்கிறது.

http://www.nutrition-and-you.com/burdock-root.html

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version