Site icon Vivasayam | விவசாயம்

உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்து வருகிறது!

இந்தியாவில் பல்லாயிரம் ஏக்கருக்கு அதிகமாக கரும்பு விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஜூன் மாதம் முதல் பருவ மழை பெய்யாத காரணத்தால் கரும்பு பயிர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே அதிகமாக கரும்பு ஏற்றுமதி செய்யும் பகுதிகளில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஆனால் இங்கேயே தற்போது பருவ மழை தவறியதால் கரும்பின் வளர்ச்சி மிக மிக குறைவாக இருந்து வருகிறது.

நம் நாட்டில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்யும் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில், முன்னர் (2013-14) உற்பத்தி செய்யப்பட்ட 26 மில்லியன் டன் கரும்பை காட்டிலும் 25 மில்லியன் டன்னிற்கு குறைவாக தற்போது உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 14% குறைவாக மழை பெய்ததேயாகும்.

கடந்த ஏழு ஆண்டுகளை ஒப்பிடுகையில் தற்போது உலக சர்க்கரை சந்தையில் இந்தியாவின் மதிப்பு குறைந்துக்கொண்டே வருகிறது.

இப்படியே தொடர்ந்து சென்றால் வரும் 2016/17 –ம் ஆண்டுகளில் இந்தியா உலக சர்க்கரை சந்தையில் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தலைமை கரும்பு வணிக தலைவரான ஹரிஸ் காலிப்பெல்லி கூறியுள்ளார்.

இந்தியாவில் சரியான பருவமழை பெய்யாததால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் கரும்பு பயிர் வளர்ச்சி பெறாமல் இருந்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா கரும்பு விவசாயிகள் கரும்பின் வளர்ச்சி குறைவாக இருப்பதால் அதனை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.

இதே போன்று மும்பையின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நாசரி கிராமத்தில் 200 km பரப்பளவிற்கு பயிரிடப்பட்டுள்ள கருப்பு பயிர்களை கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version