Vivasayam | விவசாயம்

அத்தி இலையின் பயன்கள்

அத்தி இலை நீரிழிவு நோயை குணப்படுத்த மிகச்சிறந்த மருந்தாக செயல்படுகிறது. அத்தி இலை பல்வேறு மருத்துவக் குணங்களை உள்ளடக்கியதாக உள்ளது. அதாவது மூச்சுக்குழாய் அலர்ஜி, கல்லீரல் அழைநார் வளர்ச்சி, உயர் இரத்த  அழுத்தம், தோல்பிரச்சனைகள் மற்றும் புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகச் சிறந்த இயற்கை மருந்தாக இது செயல்படுகிறது.

அத்தி இலையும் அதனுடைய மருத்துவ குணங்களும்

20

        

USDA ஆராய்ச்சியின் படி அத்தி இலை மிக சிறந்த நார் மற்றும் கால்சியம் சத்து கொண்ட  மருந்து பொருள் என்று கூறி உள்ளனர். குறிப்பாக நீரிழிவு நோயால் பாதித்தவர்கள் இந்த இலையின் சாரை வெறும் வயிற்றில் குடித்தால் அந்த பாதிப்பிலிருந்து விரைவாக விடுப்படலாம் என்று கூறியுள்ளனர்.

இந்த அத்தி இலையில் விட்டமின் A,B,C மற்றும் K சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக அல்சர் மற்றும் வயிற்று கோளாறு உள்ளவர்கள் இந்த இலையின் சாற்றை உபயோகித்தால் அந்த பாதிப்பிலிருந்து விரைவாக குணமடையலாம்.

எலும்பிற்கு மிகவும் சக்தியை கொடுக்கிறது. இரத்தத்தில் உள்ள தேவையில்லாத கிருமிகளை அழித்து விடுகிறது.

அத்தி இலையை பயன்படுத்தும் முறை:

  • இரண்டு அல்லது மூன்று இலையை அரைலிட்டர் தண்ணீரில் 15 நிமிடம் நன்றாக கொதிக்க வைத்து,பின்பு அதனை தேநீர் போன்று தினமும் குடிக்க வேண்டும்.
  • புண் பட்ட இடத்தில் அத்தி இலையை அரைத்து பூசினால் புண் விரைவில் குணமாகும். அதுமட்டுமல்லாது தோல் நோய் பிரச்சனையையும் இது குணப்படுத்தும்.
  • அத்தி இலையை அப்படியே சாப்பிட்டால் வயிற்று எரிச்சல் குறையும்.

http://www.medicaldaily.com/health-benefits-figs-and-fig-leaves-234271

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version