Vivasayam | விவசாயம்

காடுகள் அழிக்கப்படுவதால் உயிரினங்கள் அழியும்

வெப்பமண்டலக் காடுகளால் தான்  அமேசானில்  உள்ள உயிரினங்கள் தாவரங்கள், எறும்புகள், பறவைகள், வண்டுகள் மற்றும் ஆர்கிட் தேனீக்கள் அழிந்து வருகின்றன என்று உயிரினங்களைப் பற்றி படிக்கும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு நடப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக  கூறுகிறார்கள்.

வெப்பமண்டல காடுகள் உயிரினங்களுக்கு எப்படி தொந்தரவு கொடுக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வை மேற்கொண்டு வருகிறார்கள். சர்வதேச குழு,  லான்காஸ்டர் பல்கலைக்கழக குழு  பிரேசில் நாட்டில் உள்ள  அமேசான்  காடுகளில் 300 க்கும் மேற்பட்ட பல்வேறு இடங்கள்  முழுவதிலும்  காணப்பட்ட தாவரங்கள், பறவைகள், வண்டுகள், எறும்புகள், தேனீக்கள் கிட்டத்தட்ட 2,000 உயிரினங்களை வைத்து ஒரு  ஆய்வு நடத்தப்பட்டது.

7 (1)

காடுகள் கால்நடைகளுக்கு மிகவும் உதவும் வகையில் இருந்து வருகிறது. மேலும் விவசாயம் செய்யவும் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. மீதமுள்ள அனைத்து தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் வசிப்பதற்கு காடுகள் உதவியாக இருக்கிறது. ஆனால், காடுகளை அழிப்பதன் மூலம் உயிரினங்கள் அழிந்து வருகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

முற்றிலும் மாறுபட்ட மக்கள்தொகை கொண்ட காட்டுப்  பகுதிகளில்  தாவரங்கள் மற்றும் விலங்குகள் பராமரிக்கச் செய்தால் உயிரினங்கள் இழக்கப்படுவதை கட்டுப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

காடுகளில் எந்த ஒரு இடையூறுகளும் இல்லாமல், மனித செயல்பாடு மூலமாக மாற்றங்கள்  நடைப்பெற்றால் உயிரினங்கள் காட்டில் தப்பி வாழ்வதற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும் என்று Brazil´s Universidade Federal de Viçosa உள்ள ஆராய்ச்சியாளர் டாக்டர் ரிக்கார்டோ சோலார் கூறினார்.

பிரேசிலில் சமீபத்தில் காடுகளை ஒழுங்குப்படுத்தும் சுற்றுச்சூழல் சட்டம் திருத்தியமைக்கப்பட்டது மற்றும்  சுற்றுச்சூழலில் மறு சீரமைக்கும் திட்டங்களும்  திருத்தி அமைக்க அனுமதித்துள்ளது என்று பிரேசிலிய வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் உள்ள டாக்டர் ஜொய்ஸ் ஃபெரீரா கூறினார்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version