Vivasayam | விவசாயம்

ஆபத்தான  மரம்

உலகில் மிகவும் ஆபத்தான மரமாக கருதப்படுவது மென்சினல் மரம். இது கரீபியன் மற்றும்  வளைகுடா நாடான மெக்சிக்கோவில் உள்ளது. இந்த மரத்தின் மரப்பட்டைகள் மனிதனுடைய உடலில் பட்டால் தோலில் கொப்புளம் ஏற்படும். மழைக்காலங்களில்  இந்த மரத்தின் அடியில் நின்றால் அந்த மரத்தின் பழங்களில் இருந்து வரும்  துளியானது நம் உடலில் பட்டு அரிப்பை ஏற்படுத்தும்.

9

இந்த மரத்தில் உள்ள பழத்தின் பெயர் ” பீச் ஆப்பிள் அல்லது டெத் ஆப்பிள்” ஆகும். இந்த பழம் இனிப்பாக இருக்கும் ஆனால் சாப்பிட மிகவும்  கஷ்டமாக இருக்கும். அப்படியே இதை சாப்பிட்டாலும் தொண்டைப்புண் ஏற்படும். பல்வேறு  நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மரத்தில் உள்ள கிளைகளைப் பயன்படுத்தி  வேட்டைக்காக அம்பு செய்தனர். ஏனென்றால் இந்த மரத்தின் பட்டைகள் தீங்கு விளைவிப்பவை .

இந்த மரத்தினுடைய  மரக்கட்டையை எரிய வைக்கும் போது வரும் புகையால் கண்கள் கூட தெரியாமல் போய்விடும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version