Vivasayam | விவசாயம்

மருத்துவத்திற்காக பயன்படும் மரங்கள்

வடஅமெரிக்காவில் உள்ள மரங்களைத்தான் பொதுவாக மருத்துவத்திற்காக பயன்படுத்துகிறார்கள். மரங்கள்  மூலமாக நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கின்றன.  மரங்களில் இருந்து கிடைக்கும் மூலிகை மருந்தைத்தான் நாம் ஆண்டு முழுவதும் பயன்படுத்தி வருகிறோம்.

வசந்த மற்றும் கோடை காலத்தில் இலைகள் பயனுள்ள சிகிச்சைமுறை காரணிகளாக உள்ளன. இலையுதிர் மற்றும் குளிர்காலத்தில்  பட்டை , கிளைகள் அல்லது வேர்கள்  அனைத்து வியாதிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுகிறது.

மருத்துவ பயன் கொண்ட மரங்கள்:

பூச்ச மரம் (ஆல்டர்):

6 (1)

இது ஒரு சிறிய மரம். இந்த மரம்  ஈரநிலங்கள் மற்றும் ஆற்றங்கரை போன்ற ஈரமான பகுதிகளில் தான் நன்றாக வளரும். இது  சாம்பல் தண்டுகளைக் கொண்டது. பூச்ச மரத்தின் பட்டையை தண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த தண்ணீர் ஆழமான காயங்கள் உள்ள இடத்தில் கழுவ வேண்டும். இதன் பட்டை பீச்சுத் அல்லது மூல நோயை கட்டுப்படுத்தவும்  பயன்படுகிறது.  மேலும் இந்த மரத்தினுடைய பட்டை மற்றும் இலைகளை தேநீராக காய்ச்சிக் குடித்தால் அடிநா அழற்சி மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.  பூச்சமரச் சாற்றை நமைச்சல்  உள்ள இடத்தில் தடவினால் நமச்சல் சரியாகிவிடும்.

ஆப்பிள் மரம்:

ஆப்பிள் மரத்தினுடைய வேர், பட்டை காய்ச்சலுக்காக பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளில்  மெக்னீசியம், இரும்பு, பொட்டாசியம்  மற்றும் வைட்டமின்கள் சி, பி, B2 நிறைந்துள்ளது. ஆப்பிளின் தோல் வயிற்றுப்போக்கை  போக்க பயன்படுகிறது. சுட்ட ஆப்பிள்களை   மாவு ஒத்தடம் போன்று பயன்படுத்தலாம். மேலும் சூடான ஆப்பிளை  தொண்டைப்புண் மற்றும் காய்ச்சலுக்கான இடங்களில்  பயன்படுத்தலாம்.

ஆப்பிள் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை  குறைக்கவும்,  கல்லீரல் சுத்தம் செய்யவும்  உதவுகிறது. மேலும் ஆப்பிள் சாற்றுடன் பூண்டு மற்றும் ஹார்ஸ்ராடிஸ்யை சேர்த்து தோல்களின் மேல் துடைத்துக் கொள்ளலாம். இந்த கலவையை வெளிபுறமாகவும் பயன்படுத்திக்கொள்ளலாம். பின்பு பானகமாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

 

         

Exit mobile version