Vivasayam | விவசாயம்

மல்பெரி (பட்டுப் பூச்சி) இலையின்  மருத்துவக் குணநலன்கள்

அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் மற்றும் ஆசியா கண்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள முதன்மை மருத்துவ நிறுவனங்கள் மல்பெரி செடியின் (பட்டுப் பூச்சி) இலையினை ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அதில் அதிக ஆற்றல் வாய்ந்த இயற்கையான மருத்துவக் குணங்கள் நிறைந்து காணப்படுகிறது என்று கூறுகின்றனர். அது மட்டுமல்லாது இந்த இலையானது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது எனவும் கூறியுள்ளனர்.

4

இந்த இலையினைப் பற்றி 5 வருடங்கள் ஆராய்ச்சி செய்து பார்த்ததில், அதனுடைய மருத்துவக் குணமானது பல்வேறு நோய்களிலிருந்து நமது உடலை பாதுகாக்கவும் மற்றும் நம்முடைய உடலின் எடையை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும் இது பெரிதும் உதவியாக இருக்கிறது.

இந்த இலையின் பயன்கள்:

  • நம் உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.
  • உடல் எடையை குறைப்பதற்கும் மற்றும் எடையை சீராக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
  • மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
  • உடலில் கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்தும்.
  • கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை வலுவடையச் செய்கிறது.
  • எலும்பு வலுவடைவதற்கு பயன்படுகிறது.
  • தோல் வியாதிகளை குணப்படுத்தும்.
  • ஜீரணக்கோளாறுகளை சரிசெய்யும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்துகிறது, மற்றும் நரம்பு தளர்ச்சியை கட்டுப்படுத்தும்.
  • மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
  • கல்லீரல் புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்றுநோயின் தாக்கம் குறையும்.
  • அமினோ அமிலங்கள், தாது உப்புக்கள், மற்றும் வைட்டமின் ஏ, சி, பி, புரதச்சத்து அதிகம் உள்ளது.

இயற்கை கொடுத்த பல்வேறு வகையான வியக்கத்தக்க பரிசுகளில் இந்த இலையும் ஒன்று. இந்த இலையில் காமா அமினோ பியூத்திரிக் அமிலம் காணப்படுவதால் குறைவான இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு ஒரே சீரான இரத்த ஓட்டத்தை அளிக்கிறது.

இந்த இலையைப்பற்றி ஆராய்ச்சி செய்து பார்த்ததில் இதில் 15% முதல் 28% வரை புரதம் அடங்கிய அமினோ அமிலங்கள் மற்றும் பல்வேறு வகையான மருத்துவக்குணங்கள் கொண்டதாக உள்ளது. மேலும் இது பச்சை தேனீரைக் (கிரீன் டீ) காட்டிலும் 6 வகையான சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) கொண்டது 25 முறை பால் குடிப்பதில் உள்ள சத்தைக் காட்டிலும் அதிக சத்து நிறைந்தது. அது மட்டுமல்லாது தற்போதைய மிகப்பெரிய பிரச்சனையான நீரிழிவு நோய்க்கு ஒரு சிறந்த மருந்தாக செயல்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version