Vivasayam | விவசாயம்

பிளாஸ்டிக் பையிலிருந்து எரிபொருள்

இந்திய ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகளை மறுசுழற்சி செய்து கார் இயந்திரத்திற்கான எரிபொருளை தயாரிக்கலாம் என்று ஒரு புதுமையான முறையை உருவாக்கியுள்ளனர். இதனால் பிளாஸ்டிக் பைகளும் அகற்றப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் பிளாஸ்டிக் பைகள் மற்றும் மற்ற பொருட்களை மறுசுழற்சி முறையில் திரவ எரிபொருளாக மாற்ற குறைந்த வெப்பநிலை செயல்முறையை பயன்படுத்தி உருவாக்கினார்கள்.

9

பொதுவான பாலிமர், குறைந்த அடர்த்தி உடைய பாலியெத்திலின் (LDPE) ஆகியவற்றின் பிளாஸ்டிக் கழிவுகளில் இருந்து பல வகையான கொள்கலன், ஆய்வக உபகரணங்கள், கணினியின் பாகங்கள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.

மறு சுழற்சி செய்யும் முயற்சிகளை உலகின் பல இடங்களில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பாலித்தீன்கள் நிலம் மற்றும் கடலில் அதிகம் நிறைந்து காணப்படுகிறது. இந்த பாலித்தீன் கழிவுகள் சுற்றுசூழலை பாதிக்கின்றது. இதனை தடுக்கவே பாலித்தீனில் இருந்து திரவ எரிபொருள் தயாரிக்க முயற்சி மேற்கொண்டனர்.

தொழில்நுட்ப செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் ஆய்வாளர் அச்யுத் குமார் பாண்டா மற்றும் ஒடிசா தேசிய நிறுவனத்தில் பணிபுரியும் இரசாயன பொறியாளர் ரகுபன்ஷ் குமார் சிங் இருவரும் சேர்ந்து ஒரு வணிக ரீதியான தொழில்நுட்பத்தை உருவாக்க, குறைந்த அடர்த்தி உடைய பாலியெத்திலி (LDPE)-னிலிருந்து திரவ எரிபொருளை உருவாக்க முயற்சி மேற்கொண்டனர்.

பெரும்பாலான பிளாஸ்டிக் பைகள் பெட்ரோலிய வேதிப் பொருட்களால் செய்யப்படுகின்றன.

முதலில் பிளாஸ்டிக்கை 400 டிகிரி செல்சியசில் வெப்பப்படுத்தி 70 % திரவ எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவு 700 கிராம் திரவ எரிபொருளை உற்பத்தி செய்யும்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version