Vivasayam | விவசாயம்

நெல் உமி பேட்டரியின் நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கிறது

பேட்டரிகளை நீண்ட காலம் பயன்படுத்த நெல் உமி போன்ற விவசாய கழிவுப் பொருள் ஒரு ஆதாரமாக உள்ளது. ஆனால், ஒரு சமீபத்திய ஆய்வு முடிவுகளை பரிந்துரை செய்ததில் அதே நெல் உமி லித்தியம் பேட்டரிகளில் சிலிக்கான் நேர்மின்சுமை தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொரியா மேம்பாட்டு நிறுவனத்தின் (KAIST) ஆராய்ச்சியாளர்களின் சமீபத்திய ஆய்வில் நெல் உமியிலிருந்து தூய சிலிக்கானை தயாரிக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர். இந்த பேட்டரி நெல் உமி சார்ந்த சிலிக்கான் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கிறது.

8

அதனால் லித்தியம் அயன் பேட்டரியில் நேர்மின் சுமைக்காக நெல் உமியிலிருந்து தயாரிக்கப்பட்ட சிலிக்கானை பயன்படுத்தினால் பேட்டரி சக்தி வாய்ந்ததாகவும் நீண்ட காலம் பயன்படுத்த கூடியதாகவும் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

விவசாய கழிவான நெல் உமியிலிருந்து சிலிக்கான் தயாரித்தல் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது விரைவில் சந்தையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நீண்ட ஆயுள் பேட்டரியானது அனைத்து துறையினருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும் சில தகவல்கள்

நெல் உமி மூலம்  நானோ நுண்துகள்களுடைய சிலிகானை  தயாரித்து   உயர் திறன் லித்தியம் ஐயன் பேட்டரிகளை   பயன்படுத்த முடியும் என்று கொரியன் ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர்.

நெல் உமி தான் அரிசியில் பூச்சிகள் மற்றும் பாக்டீரியா தாக்காமல்  மேல்புறத்தில்  பாதுகாத்து வருகிறது. ஆனால், நெல் உமியை  அரிசி  அறுவடையின் போது அகற்றப்படும். நெல் உமி 100 மில்லியன்  டன்னுக்கு  அதிகமாக  உலகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.நெல் உமியை விவசாய பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தினால் குறைவான மதிப்பே கிடைக்கும் . அதனால்,   நெல் உமியை வேறு பயன்பாட்டிற்காக மறுசுழற்சி செய்யலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

நெல் உமி மூலம் லித்தியம் அயன் பேட்டரிகளில்  உயர் திறன் நேர்மின்முனையை  தயாரிப்பது எப்படி என்று   the National Academy of Sciences ஆய்வு பற்றி  தகவலை வெளியிட்டப்போது கொரியன் ஆராய்ச்சியாளர்கள் விவரித்தார்கள்.

நெல் உமியின் மேல்புறத்தில் நானோ நுண்துளையுள்ள சிலிக்கா (சிலிக்கான் டை ஆக்சைடு) இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது உள்புறத்தில் உள்ள அரிசி கர்னலை பாதுகாப்பதற்காக உருவானது. காற்று மற்றும் ஈரப்பதம் கடந்து செல்ல  அனுமதி கொடுக்கும்.

சிலிக்கானில்  அதிக மின் திறன் உள்ளது.  ஏனெனில், அது லித்தியம் அயன் பேட்டரி நேர்மின்முனைக்கு ஒரு சிறந்த பொருளாக கருதப்படுகிறது. கிராஃபைட் நேர்மின்முனையை விட 10 மடங்கு சிலிக்கான் கோட்பாட்டு திறன் அதிகமாக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.

நெல் உமியில் உள்ள சிலிக்காவை மாற்றுவதற்கு ஒரு வழியை ஆய்வில் கண்டுபிடித்தனர். பின்னர், அவர்கள்  இந்த நானோ நுண்துகள்களுடைய சிலிக்கான் பொருளை  சோதனை  செய்தனர். லித்தியம் மின்கலம் நேர்மின்வாயைப் போன்றவற்றை மின்வேதியியல் செயல்திறன் வெளிப்படுத்துகிறது என்று கண்டறிந்தனர்.

நெல் உமியை மறுசுழற்சி செய்வதால் லித்தியம் அயன் பேட்டரி நேர்மின்முனையை உருவாக்கம் செய்ய  முடியும் . இதனால்,  நெல் உமி மூலம்  நானோ நுண்துகள்களுடைய சிலிகானை  தயாரித்து   உயர் திறன் லித்தியம் ஐயன் பேட்டரிகளை   பயன்படுத்த முடியும் . அதுமட்டுமல்லாது,  நெல் உமி கழிவு வளமான ஆதாரமாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

மேலும் செய்திகளுக்கு

https://play.google.com/store/apps/details?id=com.Aapp.UlagaTamilOli

Exit mobile version