Site icon Vivasayam | விவசாயம்

பேரட் பாட் – கணினி விவசாயத் தொட்டி

பேரட் பாட் என்பது ஒரு தானியங்கி  தாவர தொட்டியாகும்.இந்த தானியங்குத்தொட்டியின் மூலம் தாவரங்களின் வளர்ச்சியை கண்காணிக்கலாம் மேலும் அதற்கு தேவையான சத்துக்களை தேவையான நேரத்தில் கண்டறிந்து தரும் திறன் பெற்றது. இந்த பேரட் தானியங்கி தொட்டியானது விவசாயத்துறையில் முக்கிய மைல் கல்லாக விளங்கும்.

இந்த பேரட் தானியங்கு தொட்டியில்  2 லிட்டர் தண்ணீர் மற்றும் 2 லிட்டர் மண் அடங்கியிருக்கும். இந்த தொட்டியில் அமைந்துள்ள சென்சார்கள் மூலம்  ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் மண்ணின் ஈரத்தன்மை, உரம்,சுற்றுபுற வெப்பநிலை மற்றும் ஒளி ஆகியவற்றை அளவிடும்.

இந்த பேரட் தானியங்கு தொட்டியானது  தன்னிச்சையாக செயல்படும் தன்மைக் கொண்டது. மேலும் இந்த தானியங்கி தொட்டியுடன்  ஸ்மார்ட் போனை இணைக்கும் போது அந்த தானியங்கு தொட்டியில் உள்ள அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம். ஸ்மார்ட்போனில்  இதற்கென பிரத்யோகமாக மென்பொருள் கிடைக்கிறது.இவற்றின் மூலமாக நாம் தாவரத்தை சுலபமாக கண்காணிக்க முடியும்.

இந்த புதிய தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் மூலம்  7000  வகையான  தாவரங்களை கண்காணிக்க முடியும்.

பேரட் தானியங்கித்தொட்டியில்  தேவையான அளவு தண்ணீர் இருந்தால் 3 வாரங்களுக்கு அந்த தாவரம் வாடாமல் இருக்கும். தாவரத்தின் தேவைக்கு  அதிகமான தண்ணீரை தானியங்குத்தொட்டியில் உள்ள மென்பொருள் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தேவையான போது தண்ணீரைக் கொடுக்கும். இது தான் பேரட் தானியங்கி தொட்டியின்  முக்கியமான செயல் ஆகும்.

Exit mobile version