Vivasayam | விவசாயம்

இயற்கைப் பூச்சிவிரட்டி தயாரிக்கும் முறை

2560x1600_GreenLeafs_62

தேவையானப் பொருட்கள்

கோமூத்திரம்- 20 லிட்டர்
தோல் நீக்காத காய்ந்த வேப்பங்கொட்டை – 10 கிலோ
பெருங்காயம் – 100 கிராம்
வாய்ப் புகையிலை – 1 கிலோ
ஊமத்தம் செடிகள் – மூன்று
பச்சைமிளகாய் – அரைகிலோ

செய்முறை :
வேப்பங்கொட்டையை உரலில் போட்டு உலக்கையால் நன்றாக இடித்துக் கொள்ளவும். ஊமத்தம் செடி, புகையிலை, பச்சைமிளகாய் ஆகியவற்றை பொடியாக கிள்ளிக் கொள்ளவும். இவற்றை கோமூத்திரம் உள்ள ஒரு பிளாஸ்டிக் வாளியில் போட்டு, பெருங்காயத்தையும் போட்டு கலக்கி வேடு கட்டி நிழலில் வைத்து, தினமும் இருமுறை கலக்கி விடவும். 5 நாட்களில் பூச்சிவிரட்டி தயாராகி விடும். சுத்தமானத் துணியில் வடிகட்டி, பத்து லிட்டர் நீருக்கு 3 லிட்டர் வீதம் கலந்து தெளிக்கவும்.

Exit mobile version