Site icon Vivasayam | விவசாயம்

மழைக்காலங்களில் ஆடுகளை பராமரித்தல்

கிராமப்புற வேளாண்மை பொருளாதார முன்னேற்றத்திற்கு வெள்ளாடு வளர்ப்பு முக்கிய அங்கமாக திகழ்கிறது. பால் பண்ணை மற்றும் விவசாயம் வெற்றிகரமாக அமையாமல் நலிவடைந்து வரும் இக்காலகட்டத்தில் ஆடு வளர்ப்பு ஒரு பக்கபலமாக நின்று இழப்பை ஈடுசெய்து விவசாயியை காக்கிறது. இத்தொழில் வளர்ந்து பொருளாதார வளம் பெற ஆடு வளர்ப்பில் முறையாக நவீன உத்திகளை கடைப்பிடித்து செய்யும்போது நல்ல இலாபம் ஈட்டி வளமான வாழ்வாதாரத்தை மேன்மை செய்யலாம் என்பது உருது.

இவ்வாறு பல நன்மைகள் ஆடு வளர்ப்பில் இருந்தாலும் மழைக்காலங்களில் அதனை பராமரிப்பது மிக முக்கியமாக ஒன்று குறிப்பாக மழைக்காலங்களில் ஆடுகளை தாக்கும் நுண்ணுயிரி மற்றும் நச்சுயிர் நோய் காரணமாக அதன் உற்பத்தி திறன் மற்றும் இலாபத்தினை குறைந்த அளவே பெற முடிகிறது. சுகாதாரமற்ற முறை ஆடுகளை பராமரிக்கும் போது நோய்க் கிளர்ச்சி ஏற்பட்டு உயிரிழப்பு மற்றும் உற்பத்தி திறன் குறைப்பாட்டினால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார நஷ்டம் ஏற்படுகிறது.மழைக்காலங்களில் ஆடுகளுக்கு தேவையான தண்ணீரானது மிக சுத்தமாக, சிறிது வெதுவெதுப்பான நீரை அளிக்க வேண்டும்.தண்ணீரை உட்கொள்ளும் அளவு குறைந்தால் ஆடுகளுக்கு செரிமான உறுப்பில் உட்கொண்ட தீவனம் செரிக்காத அளவு கட்டிகளாக மாறிவிடும் (Impaction).

 மழை காலங்களில் அதற்கு அதிகமான உணவு சத்துக்கள் அளிக்க வேண்டும். இது மலை குளிரை போக்க தேவையான எரிசக்தியை அளிக்கவல்லது. முறையான தீவன மேலாண்மை மூலம் மழை காலத்தில் வரும் இழப்பை தவிர்க்கலாம்.ஆடுகளுக்கு தேவையான இடவசதி அளிக்க சுகாதாரமான கொட்டகை அமைப்பு,போதிய இட வசதி,காற்றோட்டத்துடன் கூடிய கொட்டகை அமைப்பு,கொட்டகையில் மணல கொட்டி அடித்தளமானது ஆடுகளை குளிரிளிடுந்து காக்கிறது.அதனால் மூச்சு திணறல் போன்றவைகள் ஏற்பட வாய்ப்பில்லை.சினை ஆடுகளையும்,குட்டிகளையும், கிடா ஆடுகளை தனியான கொட்டகையில் பராமரிக்க வேண்டும்.

முறையற்ற   பராமரிப்பினால்   மழைக்காலங்களில் ஆடுக்கு பாதிக்கும் நோய்கள் :

  • துள்ளிமாரி நோய்
  • அடடைப்பான நோய்
  • ஆட்டுவெக்கை நோய்
  • நீலநாக்கு நோய்
  • குழம்பு அழுகல் நோய்
  • ஈ புழுகளிட்ட புண்

நன்றி

மதுபாலன்

வேளாண்மை இயக்குநர்

தருமபுரி

Exit mobile version