Site icon Vivasayam | விவசாயம்

விவசாயத்திற்கு தண்ணீர்

(படத்தின் மேல் சொடுக்கி பெரியதாக பார்க்கவும்)

நேற்றை விவசாயம் இதழில் தண்ணீர் எவ்வாறு தேவை என்பதை பார்த்தோம். நமக்கு இயற்கையாக கிடைக்கக்கூடிய தண்ணீரை நாம் விவசாயத்திற்கு எடுத்து வருகிறோம் .

பூமியில் சிறப்பான இயல்பு என்னவெனில் நாம் ஒன்று கொடுத்தால் அது 100 ஆக திருப்பிக்கொடுக்கும். ஒரு விதை ஆலமரமாக வளர்கிறது, ஒரு நெல்லை பூமிக்கு கொடுத்து பல நெல்லை பலனாக பெற்றுக்கொள்கிறோம். எனவே கற்பக விருட்சம் என்பது இங்கே நம் பூமிதான்.

இந்த பூமியில் இருந்து கிடைக்கக்கூடிய தண்ணீர் நமக்கு மூன்று வழிகளில் கிடைக்கிறது.

1.நிலத்தடி நீர் ஆதாரம்
இந்த இயற்கை வழி நீர் ஆதாரம் மூலம் ஆறுகளில் இருந்தும், ஏரிகளிலும் இருந்தும், ஆழ் துறை பம்ப்களின் மூலமும் கிடைக்கக்கூடிய நீர்.

2. மழை வழி நீர்
மழை பொழிவால் கிடைக்கக்கூடிய நீராதாரம்

3.மாசு நீர்
இந்த நீர் நம்மால் மாசுப்படுத்தப்பட்டு மீண்டும் சுத்திகரித்து பயன்படுத்தலாம் என்ற நிலையில் உள்ள நீர் ஆதாரம்.

இந்த மூன்றில் முதல் இரண்டு ஆதாரங்களும் ஒன்றுடன் ஓன்று இணைந்தவை. ஆற்று நீர் மற்று மழை நீர் குறைவாக கிடைப்பதால் கிடைத்த நீர்களை எல்லாம் பயன்படுத்தி நாம் மாசுப்படுத்திவிடுகிறோம்.

ஒரு உண்மை தெரியுமா? தனக்கு கிடைக்கூடிய நீரில் 70% நீரை மனிதன் விவசாயத்திற்கு பயன்படுத்துகிறான் என்பதுதான் அது. அதாவது பூமியில் இருந்து கிடைக்கூடிய நீரை முக்கால்வாசிக்கு மேல் நாமே எடுத்துக்கொள்கிறோம் என்பதே நிதர்சன உண்மை

விவசாயத்திற்கு அதிகப்படியான நீர்களை பயன்படுத்தும் பயிர்களை எல்லாம் நாம் அடையாளம் கொண்டு அவற்றிற்கு ஏற்றார்ப்போல்  சில மாற்றங்களை ஏற்படுத்தி குறைவான நீரை பயன்படுத்தும் வழி செய்யவேண்டும் .
இல்லையேல் பேரிழப்பு நமக்கு தான்.

எனவே நமக்கு கிடைக்கக்கூடிய ஒரு சொட்டு குடிநீரை கூட விரயம் செய்யாமல் சேமிக்கவேண்டிய அவசியம் நமக்கு உள்ளது. ஏற்கனவே மழை பொழிவு பொய்த்துவிட்டது, கிடைக்கூடிய நீர் வழிகளும் அடைக்கப்பட்டுவிட்டன. கிடைப்பவையைசேமிக்க கற்றுக்கொள்வோம்.

Exit mobile version