Site icon Vivasayam | விவசாயம்

மா

உர மேலாண்மை

உரம் முதல் வருடம்

(கிலோ)

வருடந்தோறும் அதிகரிக்க வேண்டிய அளவு (கிலோ) 6 வது வருடம் முதல் (கிலோ)
தொழு உரம் 10.00 10.00 50.00
தழை 0.2(யூரியா- 0.430) 0.2(யூரியா- 0.430) 1.0(யூரியா- 2.17)
மணி 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 0.2 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 1.22) 1.0 (சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் – 6.1)
சாம்பல் 0.3 (மூரியேட் ஆப்பொட்டாஷ் – 0.48) 0.3 (மூரியேட் ஆப்பொட்டாஷ் – 0.48) 1.5 (மூரியேட் ஆப்பொட்டாஷ் – 2.4)

செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் மரத்தை சுற்றி 45- 90 செ.மீ தூரத்தில் இட வேண்டும்.

பூக்கும் தருணத்தில் கடைபிடிக்க வேண்டிய மேலாண்மை முறைகள்

      மாவானது சராசரி விளைச்சலை இரண்டாண்டிற்கு ஒரு முறையே அளிக்கவல்லது. குறைவாக மகசூல் கிடைக்கும் ஆண்டுகளில் பொட்டாசியம் நைட்ரேட் என்னும் வேதிப் பொருளைத் தெளிப்பதன் மூலம் மாவில் பூப்பதை ஊக்குவிக்க முடியும். குறைவாக மகசூல் கிடைக்கும் ஆண்டுகளில் பொட்டாசியம் நைட்ரேட்1% (10 கிராம்/லிட்டர்) என்றளவில் தெளிப்பதன் மூலம் மாவில் பூப்பதை ஊக்குவிக்க முடியும். இது உறக்கத்தில் இருக்கும் பூ மொட்டுகளை ஊக்குவித்து பூத்தலை அதிகரிக்கிறது.

      பூக்கும் தருணத்தில் என்.ஏ.ஏ 20 பி.பி. எம் கரைசலைத் தெளிப்பதன் மூலம் காய் பிடிப்பை அதிகரிக்க இயலும். கடுகு அளவில் இருக்கும் பொழுது பொட்டாசியம் நைட்ரேட் 2% (20 கிராம்/லிட்டர்) என்றளவில் தெளிப்பதன் மூலம் காய்களின் அளவை அதிகரிக்கலாம். தரத்தினை அதிகரிக்க காய்கள் பட்டாணி அளவில் இருக்கும் பொழுதும் மீண்டும் 15 நாள் கழித்து சல்பேட் ஆஃப் பொட்டாஷ் 2% (20 கிராம்/லிட்டர்) தெளிக்கலாம்.

      பூக்கும் தருணத்தில் போரிக் அமிலம் 0.02% ( 2 கிராம்/10 லிட்டர்) மற்றும் சார்பிட்டால் 2% (20 கிராம்/லிட்டர்) தெளிக்கலாம்.

Exit mobile version